அண்மையில் சிங்கப்பூர் கடற்கரைகளில் சில எண்ணெய்க் கசிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாடாளுமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) தொடங்குகிறது.
ஜூன் 14ஆம் தேதி நிகழ்ந்த எண்ணெய்க் கசிவு குறித்து போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஆகியோர் அறிக்கை தருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் இச்சம்பவம் குறித்து 25க்கும் மேற்பட்ட கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் 3 பில்லியன் வெள்ளி கள்ளப்பண விவகாரம் குறித்தும் கேள்விகளை கேட்கவுள்ளனர்.
3 பில்லியன் வெள்ளி கள்ளப்பண விவகாரம் தொடர்பில் 10 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கள்ளப் பணம் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்படுமா என்று உள்துறை அமைச்சிடம் நாடாளுமன்ற எதிர்தரப்பு தலைவர் பிரித்தாம் சிங் கேள்விகேட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சுவா சூ காங் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வேலையிட மரணம் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகேட்டுள்ளனர்.

