ஊடக ஆணையம், தென்கொரியாவின் ஒலிபரப்பு நிறுவனம் இடையே பங்காளித்துவம்

ஊடக ஆணையம், தென்கொரியாவின் ஒலிபரப்பு நிறுவனம் இடையே பங்காளித்துவம்

2 mins read
உலகளாவிய பார்வையாளர்களுக்கான உள்ளடக்கத் தயாரிப்பு
0a713c7f-8956-4214-81fb-bdf46646aa70
தென் கொரியாவிற்கு மேற்கொண்ட ஒரு தொழில்சார் கற்றல் பயணத்தின் போது, ​​தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியாட் ஹாவ் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. - படங்கள்: ஏஷியாஒன்

தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையமும், தென்கொரியாவின் தொலைக்காட்சி, வானொலிக் கட்டமைப்பான சோல் ஒலிபரப்பு அமைப்பும் (எஸ்பிஎஸ்), உலகளாவிய பார்வையாளர்களுக்காக ஊடக உள்ளடக்கத்தைக் கூட்டாக உருவாக்கவும் இரு நாடுகளின் ஊடகத் தொழில்களில் உள்ள திறன்களை வலுப்படுத்தவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 21) வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், உலகளவில் ஈர்க்கும் உள்ளடக்கத்தை உருவாக்கும் எஸ்பிஎஸ்சின் லட்சியத்தையும் அனைத்துலகப் பார்வையாளர்களுக்காக உயர்தரத் தயாரிப்புகளை உருவாக்கும் சிங்கப்பூரின் முயற்சியையும் இந்தப் பங்காளித்துவம் ஒன்றிணைப்பதாக ஆணையம் தெரிவித்தது.

இந்தத் திட்டங்களில் நீண்ட நாடகங்கள், பல்சுவை நிகழ்ச்சிகள், குறுநாடகங்கள், புனைவல்லாத உள்ளடக்கம், பிற பொழுதுபோக்கு வடிவங்கள் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

சோலுக்கு மேற்கொண்ட ஒரு தொழில் கற்றல் பயணத்தின்போது, ​தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ்வின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், இரு நாடுகளின் ஊடக நிறுவனங்களும் நிபுணர்களும், உருவாக்கம் மற்றும் தயாரிப்பு முதல் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள், எல்லை தாண்டிய விநியோகம் வரையிலான முழு ஊடக மதிப்புத் தொடரிலும் ஒத்துழைக்கும்.

பங்காளித்துவத்தில் செயற்கை நுண்ணறிவு திட்டங்கள்

கூடுதலாக, உள்ளடக்க உள்ளூர்மயமாக்கல் கருவிகள், தானியங்க பிந்தைய தயாரிப்பு செயல்முறைகள், செயற்கை நுண்ணறிவு மூலம் உள்ளடக்க உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய, செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஊடகத் தீர்வுகளின் மேம்பாட்டையும் இந்தப் பங்காளித்துவம் ஆராயும்.

கூட்டு முன்னோடித் திட்டங்கள், பயிற்சித் திட்டங்கள், இந்தத் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவளித்து, தொழில்துறையின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Iதகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம், எஸ்பிஎஸ் ஆகியவை வளர்ந்து வரும் ஊடக வடிவங்கள், இணையத் தளங்கள், வருவாய் ஈட்டும் மாதிரிகளில் புதிய வணிக வாய்ப்புகளையும் கண்டறியும்.

இந்தக் கூட்டு முயற்சி, இணை முதலீட்டு முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிப்பதோடு, சந்தை அணுகலை விரிவுபடுத்தி, இரு நாடுகளிலும் உள்ள திறமையாளர் குழுக்களைப் பயன்படுத்திக்கொள்ளும்.

ஆணையத்தின் ஊடகத் தொழில் குழுமத்தின் உதவித் தலைமை நிர்வாக அதிகாரி இவோன் டாங், “இந்தப் பங்காளித்துவம் பொழுதுபோக்குத் துறையில் தென்கொரியாவின் உலகளாவிய செல்வாக்கை வலுப்படுத்துவதோடு, அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கத்திற்கான மையமாக சிங்கப்பூர் விளங்கும் நிலைக்குப் பக்கபலமாக அமைகிறது,” என்றார்.

“இந்தக் கூட்டு முயற்சி, உலகளாவிய பார்வையாளர்களுக்கு உயர்தர உள்ளடக்கத்தை வழங்குவதற்காக இருதரப்பினரின் பலங்களையும் ஒன்றிணைக்கும் என்றும், அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பன்மொழி அணுகலை மேம்படுத்தி, ஆசியான் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் சென்றடைதலை விரிவுபடுத்தும் என்று எஸ்பிஎஸ்சின் தலைமை நிர்வாக அதிகாரி பேங் மூன்-ஷின் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்