லக்கி பிளாசா மேற்கூரை இடிந்து விழுந்தது

வணிகம் பாதிக்கப்பட்டதாக கடைக்காரர்கள் கவலை

லக்கி பிளாசா மேற்கூரை இடிந்து விழுந்தது

1 of 2
படம்: ஃபெய்த் டோரஸ் டாமிங்கோ டி ஜீசஸ்/ஃபேஸ்புக்
படங்கள்: ஃபெய்த் டோரஸ் டாமிங்கோ டி ஜீசஸ்/ஃபேஸ்புக்

06 Apr 2026 - 8:29 pm

1 mins read

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள லக்கி பிளாசாவின் கீழ்த்தளத்தினுடைய மேற்கூரையின் ஒரு பகுதி திங்கட்கிழமை (ஏப்ரல் 6) காலை இடிந்து விழுந்தது.

காலை 7.45 மணியளவில் சிறிய துண்டுகள் விழத் தொடங்கியதாகவும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து மேற்கூரையின் பெரிய பகுதிகள் கீழே விழுந்ததாகவும் பாதுகாப்புக் காவலர் ஒருவர் தெரிவித்தார்.

நண்பகல் 1.25 மணியளவில் அந்தப் பகுதி மூடப்பட்டு, பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது.

“நல்வாய்ப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இது நடக்கவில்லை,” என்று அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் சேனல் நியூஸ் ஏஷியாவிடம் தெரிவித்தார்.

எனினும், விபத்தினால் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக நண்பகல் 2 மணிக்குள் 20 வாடிக்கையாளர்கள் வரும் ஒரு மின்னணு சாதனக் கடைக்கு ஒருவர்கூட வரவில்லை என்று அக்கடையின் ஊழியர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் நீர் புகுந்ததால், ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்