பேஃபிரண்ட்டில் நீர் விளையாட்டுகளுக்கான புதிய வசதி

1 mins read
78f26f28-fa9a-4b36-bad3-46be6a47f42d
நீர் விளையாட்டுக்கான புதிய ‘பே‌ஷன் வேவ்’ வசதி மரினா பே வட்டாரத்தில் அமையும். - கோப்புப் படம்: சாவ்பாவ்

மரினா பே வட்டாரத்தில் நீர் விளையாட்டுகளுக்கென புதிய வசதி ஒன்று அமைக்கப்படவுள்ளது.

‘பே‌ஷன் வேவ் அவுட்போஸ்ட்’ எனப்படும் அந்தப் பகுதியை மக்கள் கழகம், 2025ஆம் ஆண்டுக்குள் பேஃபிரண்ட்டில் அமைத்துத் தரும். அங்கு மக்கள், மரினா பே வட்டாரத்தின் அழகை ரசித்தவாறு படகோட்டம், கடல்நாகப் படகோட்டம் (dragon boating), சைக்கிள் படகோட்டம் (pedal boating) போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

புதிய நீர் விளையாட்டு வசதி, மரினா பே வாட்டர்ஃபிரன்ட் புரோமனாட் (Marina Bay Waterfront Promenade) பகுதியில் ரெட் டாட் காட்சியகத்துக்கு முன்னால் அமையும். பேஃபிரண்ட், டவுன்டவுன், மரினா பே ஆகிய பெருவிரைவு ரயில் நிலையங்களிலிருந்து அதற்கு நான்கு நிமிடங்களில் நடந்து போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று (செப்டம்பர் 14) நடைபெற்ற புதிய வசதியை அறிவிக்கும் சடங்கில் தற்காப்பு, மனிதவள அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கலந்துகொண்டார். புதிய வசதி, மரினா பே வட்டாரத்துக்கு மெருகூட்டும் என்றும் அது அவ்வட்டாரத்தை உருமாற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்