தானியங்கி விநியோக இயந்திரம்வழி மருந்து

தானியங்கி விநியோக இயந்திரம்வழி மருந்து

1 mins read
4da1b845-1d52-4adb-8adb-8d47cebb0cc2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மருந்தகங்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் மருந்தகங்களில் கிடைக்கக்கூடிய மருந்துகளை இனி நோயாளிகள் தானியங்கி விநியோக இயந்திரம்வழி வாங்கிக்கொள்ளலாம்.

சாங்கி பொது மருத்துவமனையின் 'ஃபார்மசிஸ்' முன்னோடித் திட்டத்தின்கீழ் தொலைத்தொடர்பு ஆலோசனைக்குப் பின் நோயாளிகள் இவ்வாறு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

கடுமை அல்லாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர் தங்களின் மருந்துகளைப் பெற்றுக்கொள்வது மேலும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'ஃபார்மசிஸ்' திட்டத்தின் மூலம் மே மாதத்தில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் பலனடைந்துள்ளனர்.

நோயாளிகள் தங்களின் பெயரையும் தொடர்பு எண்ணையும் இயந்திரத்தில் பதிவிட்டதை அடுத்து மருந்தகர் நோயாளிகளுடன் தொடர்புகொண்டு மருந்துகள் கிடைப்பதற்கு வகைசெய்வார். விரைவில் இத்திட்டம் சிமெய், சாங்கி வட்டாரங்களில் வலம்வரும்.

குறிப்புச் சொற்கள்