சீனாவில் 100 மில்லியன் வர்த்தகங்களில் பேலா! வசதி

சீனாவில் 100 மில்லியன் வர்த்தகங்களில் பேலா! வசதி

படம்: சாவ்பாவ்

12 Nov 2026 - 5:03 pm

1 mins read

சீனாவில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகங்களில் சிங்கப்பூரர்கள் இனி டிபிஎஸ் பேலா! செயலியைக் கொண்டு கியூஆர் குறீயீட்டை வருடி கட்டணம் செலுத்த முடியும்.

இந்த வசதியால் சீனா செல்லும் சிங்கப்பூரர்கள் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பேலா! பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

அலிபே, வெய்சின் பே முறைகளைப் பயன்படுத்தும் வர்த்தகங்களில் டிபிஎஸ் பேலா! செயலிப் பயனர்கள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம் என்று டிபிஎஸ் வங்கி வியாழக்கிழமை (நவம்பர் 12) அறிக்கை மூலம் தெரிவித்தது. போப் மார்ட், சோங்மோன்ட் போன்ற பிரபல சில்லறை விற்பனைக் கடைகளிலிருந்து அக்கம்பக்கத்துக் கடைகள், உணவகங்கள் வரை இந்த வசதி பொருந்தும்.

இதன் மூலம் சீனாவின் மூன்று முக்கிய கியூஆர் குறியீட்டுக் கட்டணக் கட்டமைப்புகளிலும் சேவைகளை வழங்கும் முதல் சிங்கப்பூர் வங்கியாகத் தாங்கள் விளங்குவதாக டிபிஎஸ் கூறியது. அவ்வங்கி ஏற்கெனவே யூனியன்பே தளத்துடனான ஒப்பந்தத்தின் மூலம் சேவைகளை வழங்குகிறது.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகு சீனாவுக்கு அதிகமானோர் பயணம் செய்துவருகின்றனர். அதையொட்டி டிபிஎஸ் அந்நாட்டில் தான் வழங்கும் கட்டணச் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் வெளிநாட்டவர் சீனாவுக்கு 11.6 மில்லியன் பயணங்களை மேற்கொண்டதாக அந்நாட்டின் தேசியக் குடிநுழைவு நிர்வாகம் தெரிவித்தது. அந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதைவிட 15.6 விழுக்காடு அதிகமாகும்.

குறிப்புச் சொற்கள்