நகரின் மையத்துடன் பீஷானை இணைக்கும் நடையர், சைக்கிள் பாலம்

நகரின் மையத்துடன் பீஷானை இணைக்கும் நடையர், சைக்கிள் பாலம்

2 mins read
திட்டத்தின் அனைத்து அம்சங்களும் 2027ல் நிறைவடையும்
2b259c3f-3fc7-4693-bc21-cc624f99ff3c
தீவு விரைவு (பிஐஇ) மேம்பாலம் ஏறத்தாழ 700 மீட்டர் நீளமுள்ளதாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பீஷானையும் நகரின் மையப்பகுதியையும் இணைக்கும் புதிய சைக்கிள், நடையர் மேம்பாலத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

ஏறக்குறைய 700 மீட்டர் நீளமுள்ள தீவு விரைவு (பிஐஇ) மேம்பாலம், 10 கிலோமீட்டர் பசுமைப் பாதையின் இறுதி இணைப்பாக அமைகிறது. பாலம் தயாரானதும் சைக்கிள் ஓட்டுநர்கள் 30 நிமிடங்களுக்குள் பீஷானில் இருந்து நகரின் மையப்பகுதியை அடைய முடியும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் வியாழக்கிழமை (ஜூலை 2) தெரிவித்தார்.

இந்தப் பாதை காலாங் ஆற்றுப் பகுதியில் உள்ள பூங்காக்கள், நீர்நிலைகளுக்குச் செல்வதை எளிதாக்கும்.

இதனுடன் புதிய பூங்கா இணைப்புப் பாதை, மார் தோமா சாலைக்கான சுரங்கப்பாதை, காலாங் ஆற்றுப் பகுதியில் அகலமான பாதை அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.

மேலும், மத்திய விரைவுச் சாலையில் உள்ள வாம்போ மேம்பாலத்தின் கீழ் உள்ள திறந்தவெளியை விளையாட்டுத் திடல்களாக மாற்றுவது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த மேம்பாலம் மற்றும் இதர மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்பாட்டுப் பணிகளின் விவரங்கள்

பிஐஇ பாலம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஜூலை நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை நான்கு இரவுகளில் தீவு விரைவுச் சாலையின் சில பகுதிகள் தற்காலிகமாக மூடப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் அறிவித்துள்ளது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நெரிசல் இல்லாத நேரத்தில் சாலை மூடப்படும்.

ஜூலை 12, ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில், பிஐஇ (துவாஸ்) வெளியேறும் பகுதி 15A முதல் மத்திய விரைவுச் சாலை (சிடிஇ) வரையிலான பகுதியும் பிஐஇ (சாங்கி) வெளியேறும் பகுதி 15 முதல் 13 வரையிலான பகுதியும் மூடப்படும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

வாகன ஓட்டிகள் மொல்மெய்ன் சாலை, தாம்சன் சாலை, அப்பர் சிராங்கூன் சாலை வழியாகத் தங்கள் பயணத்தைத் தொடரலாம்.

ஜூலை 26ஆம் தேதி பிஐஇ (துவாஸ்) வெளியேறும் பகுதி 15A முதல் 17 வரையிலான பகுதியும், சிராங்கூன் சாலையிலிருந்து பிஐஇ (துவாஸ்) சிடிஇ இணைப்புகளும் மூடப்படும். ஓட்டுநர்கள் பிராடல் சாலை, மோல்மெய்ன் சாலைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி பிஐஇ (சாங்கி) வெளியேறும் பகுதி 15 முதல் 13 வரையிலான பகுதியும், சிடிஇ-லிருந்து அப்பர் சிராங்கூன் சாலை, பிஐஇ (சாங்கி) செல்லும் பல வெளியேறும் பாதை இணைப்புகளும் மூடப்படும். அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் பிராடல் சாலை, பாலஸ்டியர் சாலை,சிராங்கூன் சாலை வழியாக மாற்றுப் பாதைகளில் செல்லலாம்.

பாதிக்கப்படும் இடங்களில் வழிகாட்டி பலகைகளும் தடைகளும் அமைக்கப்படும் என்பதால், வாகன ஓட்டிகள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்