புக்கிட் பாஞ்சாங்கில் துப்புரவு வாகன விபத்தில் பாதசாரி மரணம்: ஓட்டுநர் கைது

புக்கிட் பாஞ்சாங்கில் துப்புரவு வாகன விபத்தில் பாதசாரி மரணம்: ஓட்டுநர் கைது

1 mins read
bcf1ac32-c325-420c-9c69-8d9bcc35d487
மரணம் விளைவிக்கும் விதமாக கவனமின்றி வாகனம் ஓட்டிய சந்தேகத்தில் 39 வயது துப்புரவு வாகன ஓட்டுநர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார். - படம்:ஷின்மின்
Google News Preferred Icon

புக்கிட் பாஞ்சாங்கில் ஒரு வாகனம் பாதசாரியை மோதிய விபத்தில் வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சனிக்கிழமை (ஏப்ரல் 25) செஞ்சா குளோஸ் முகவரியில் காலை 8.25 மணிக்கு நடந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

சக்கர நாற்காலியில் சென்றுகொண்டிருந்த 69 வயது ஆடவர் கடுமையான காயமுற்றார். சம்பவ இடத்தில் முதியவருக்கு அவசர முதலுதவிகள் மருத்துவ அதிகாரிகளால் வழங்கப்பட்டன.

பிறகு உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கு முதியவர் சுயநினைவின்றி அழைத்துச் செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அங்கு சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் மரணமடைந்தார்.

மரணம் விளைவிக்கும் விதமாக கவனமின்றி வாகனம் ஓட்டிய சந்தேகத்தில் அந்த 39 வயது துப்புரவு வாகன ஓட்டுநர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.

விபத்தை நேரில் பார்த்த திரு கியு என்ற பாதுகாவல் அதிகாரி, முதியவர் தரையில் அசைவற்றுக் கிடந்ததையும், லாரியின் அடியில் சக்கர நாற்காலி சிக்கியிருந்ததையும் கண்டதாகத் தெரிவித்தார்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்துதுப்புரவுவாகனம்லாரிமரணம்ஓட்டுநர்முதியவர்கைதுகாவல்துறைசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை