மக்கள் செயல் கட்சிக்குப் பலத்த ஆதரவு: அமைச்சர் டியோ

1 mins read
9f56bdcf-7444-4e91-928a-9c2e9ed1b99e
ஜாலான் புசார் குழுத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற மக்கள் செயல் கட்சி அணி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் அனைத்துலக பங்காளிகள் மே 3 பொதுத் தேர்தலின் முடிவுகளைக் கண்காணித்து ஒரு புறம் வாழ்த்து செய்திகளை அனுப்பினாலும் மறுபுறம் ஆளுங்கட்சிக்கு இருக்கும் பலத்தையும் பார்க்கிறார்கள் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

மே 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூரத்திலிருந்து கண்காணிப்போர் சிங்கப்பூர் வாக்காளர்கள் அபாயங்களையும் நிச்சயமற்ற சூழலையும் அடையாளம் காண்பதில் மிகவும் சாமர்த்தியமாக இருந்தைக் குறிப்பிட்டதாக திருமதி டியோ கூறினார்.

பொதுத் தேர்தல் பற்றி கருத்துரைத்த சிலர் ஒற்றுமையான சிங்கப்பூர் அதற்கு எதிராக வரும் கடுமையான சூழலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது என்ற நம்பிக்கையைத் தருவதாகத் திருமதி டியோ சொன்னார்.

“தேசிய அளவில் நாம் கையாள வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன,” என்ற அவர், “அடுத்த தவணைக் காலத்துக்கான அரசாங்கத்தில் உள்ள எங்களுக்கு புவிசார் அரசியல் தடங்கல்களும் அனைத்துலக வர்த்தக் கட்டமைப்பு மாற்றங்களும் சவால்களாக அமையும்,” என்றார்.

சிங்கப்பூரின் நிலைப்பாட்டை உறுதிசெய்ய அரசாங்கம் பல வழிகளைக் கண்டறியும் என்று அவர் கூறினார்.

திருமதி டியோவும் அவரது அணியும் பியோ கிரெசண்ட் சந்தை, உணவங்காடி நிலையத்தில் மக்கள் தந்த ஆதரவுக்காக நன்றி கூறினர்.

- படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திருமதி டியோ, திருவாட்டி டென்னிஸ் புவா, திரு வான் ரிஸால் வான் சக்காரியா, புதுமுகம் ‌‌‌ஷான் லோ ஆகியோர் அடங்கிய அணி ஜாலான் புசார் குழுத்தொகுதியில் 75.21% வாக்குகள் வென்று சீர்த்திருத்த மக்கள் கூட்டணியை வென்றது.

குறிப்புச் சொற்கள்