‘டிமென்‌ஷியா சிங்கப்பூர்’ செயலி பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருக்கக்கூடும்

‘டிமென்‌ஷியா சிங்கப்பூர்’ செயலி பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருக்கக்கூடும்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2026 - 9:28 am

1 mins read

மறதிநோய் உள்ளவர்களுக்கு ஆதரவு வழங்கும் சிங்கப்பூர் மறதிநோய் ஆதரவு அமைப்பின் (டிமென்‌ஷியா சிங்கப்பூர்) காரா எனப்படும் மின்னிலக்கத் தள உறுப்பினர்கள் சிலரின் தனிப்பட்ட தகவல்கள் நவம்பர் மாதம் 1ஆம் தேதி கசிந்திருக்கக்கூடும்.

இணையப் பாதுகாப்பு தொடர்பான சம்பவம் நிகழ்ந்ததையடுத்து இந்நிலை உருவானது. தளத்தின் உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்படாத தகவல் குறிப்புகள் (notifications) அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இதுபற்றித் தங்களுக்குத் தெரியவந்ததாக புதன்கிழமை (நவம்பர் 11) அமைப்பு, காரா செயலி பயனர்களுக்கு மின்னஞ்சல்வழி தெரிவித்தது.

உறுப்பினர்கள் சிலரின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருக்கக்கூடும் என்று விசாரணையில் தெரியவந்தது. பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், உறுப்பினர் அடையாள எண்கள் ஆகியவை அத்தகவல்களில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்