சாங்கி சாலைக்கும் ஜாலான் கெம்பாங்கானுக்கும் இடையில் உள்ள சாலைச்சந்திப்பில் குழாய்க் கசிவு ஏற்பட்டதால் அவ்விடத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சேதமடைந்ததுடன் சாலையில் வெள்ளம் ஏற்பட்டது.
இதுகுறித்த அக்டோபர் 12 அதிகாலை 4.11 மணிக்குத் தகவல் கிடைத்ததாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) தெரிவித்தது.
குழாயைப் பழுதுபார்க்க தனது பராமரிப்பு ஊழியர்களைச் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைத்ததாக பியுபி கூறியது.
பழுதுபார்ப்புப் பணிகளுக்காக சாங்கி சாலையின் நான்கில் இரண்டு தடங்கள் மூடப்பட்டன.
பழுதுபார்ப்புப் பணிகள் அதே நாள் இரவு 8.15 மணிக்கு நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மூடப்பட்டிருந்த சாலைத் தடங்கள் அக்டோபர் 13ஆம் தேதி காலை 6 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டன.
குழாய் கசிவுக்குக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.
“பாதிக்கப்பட்ட வாகன ஓட்டுநர்களும் குடியிருப்பாளர்களும் பொறுமை காத்தனர். அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று பியுபி தெரிவித்தது.