நிறுவனங்கள் பங்குச் சந்தையில் இடம்பெறுவதை எளிதாக்க திட்டம்

1 mins read
64f7eae9-709a-4a3b-891a-bce217bf462e
சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தைப் பட்டியலில் இடம்பெற விரும்பும் நிறுவனங்கள் அதற்கான நடைமுறைகள் சீராக்கப்படுவதைக் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

பங்குச் சந்தையில் பட்டியலிடுவது தொடர்பில் சிங்கப்பூர்ப் பங்குச்சந்தைக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின்கீழ் (SG RegCo) வரும் அனைத்து மறுஆய்வுச் செயல்முறைகளையும் ஒருங்கிணைப்பதற்குச் சிங்கப்பூர் நாணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அதன்மூலம், பங்குச் சந்தைப் பட்டியலில் இடம்பெற விரும்பும் நிறுவனங்கள் பல்வேறு அமைப்புகளுடன் ஈடுபாடுகொள்ள வேண்டியிராது.

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையின் ஒழுங்குமுறை ஆணையந்தான் எஸ்ஜி ரெக்கோ.

பங்குச் சந்தைப் பட்டியலிடப்படுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.

இதனிடையே, பங்குச் சந்தைப் பட்டியலில் இடம்பெறுவதை எளிதாக்கும் நடைமுறைகளை எஸ்ஜி ரெக்கோ புதன்கிழமை (அக்டோபர் 29) அறிவித்துள்ளது. நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச லாப வரம்பு $30 மில்லியனிலிருந்து $10 மில்லியனாகக் குறைக்கப்பட்டிருப்பதும் அதில் ஒன்று.

இன்னும் வருவாய் ஈட்டாத, அதே நேரத்தில் வளர்ந்துவரும் துறைகளில் வலுவான வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நிறுவனங்கள் பங்குச் சந்தையில் இடம்பெறுவதற்கு இது வழிவகுக்கும்.

புதிய பரிந்துரைகளின்கீழ், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட விரும்பும் நிறுவனங்கள் இனி எஸ்ஜி ரெக்கோவை மட்டுமே நாட வேண்டியிருக்கும்.

தனது பரிந்துரைகள் தொடர்பில் ஆர்வமுடையோர் வரும் நவம்பர் 29ஆம் தேதிக்குள் கருத்துரைக்கலாம் என நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்