2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் பிப்ரவரி 18ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத் திட்ட அறிக்கையைப் பிரதமர் வோங் வாசிப்பது வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நேரலையாக ஒலி, ஒளிபரப்பப்படும் என்று திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 3) நிதி அமைச்சு தெரிவித்தது.
இணையம் மூலமாகவும் https://www.mof.gov.sg/singaporebudget என்னும் தளத்தில் அவரது உரையைக் காணமுடியும்.
வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதன் முழு விவரங்கள் சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்ட இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
சிங்கப்பூரின் பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு, வரவுசெலவுத் திட்டத்தை திரு வோங் தாக்கல் செய்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

