பிரதமர் லாரன்ஸ் வோங் சனிக்கிழமை (டிசம்பர் 20) முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை விடுமுறையில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.
பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) அறிக்கையில் இத்தகவல்களை வெளியிட்டது.

