அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப்புடன் பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை (நவம்பர் 18) தொலைபேசியில் பேசினார். அதிபர் தேர்தலில் வென்றது குறித்து டிரம்ப்புக்கு பிரதமர் வோங் வாழ்த்து தெரிவித்தார்.
தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு பிரதமர் வோங் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “அமெரிக்க-சிங்கப்பூர் பங்காளித்துவ உறவு வலுவாகவும் ஆற்றல்மிக்கதாகவும் உள்ளது. பரஸ்பர மரியாதை, பொதுவான நலன்களின் அடிப்படையில் அது கட்டியெழுப்பப்பட்டுள்ளது,” என்றார்.
ஜி20 உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்குச் சென்றுள்ள பிரதமர் வோங், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்த டிரம்ப்புடனும் அவரின் குழுவினருடனும் சேர்ந்து பணியாற்ற தாம் ஆவலுடன் இருப்பதாகச் சொன்னார்.

