அமெரிக்க வரி: நியூ மெக்சிகோ ஆளுநருடன் பிரதமர் வோங் ஆலோசனை

1 mins read
7b27138a-23b6-43f7-9417-1ce60bdfa19c
நியூ மெக்சிகோ ஆளுநரை வரவேற்ற பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: லாரன்ஸ் வோங்/எக்ஸ் தளம்

அமெரிக்கா அண்மையில் அறிவித்த வரிகள் சிங்கப்பூரை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது குறித்து நியூ மெக்சிகோ ஆளுநர் மிசேல் லுஜான் கிறிஷாமுடன் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆலோசனை நடத்தி உள்ளார்.

சிங்கப்பூர் வந்த திருவாட்டி லுஜான் கிறிஷாம் இஸ்தானாவில் திரு வோங்கைச் சந்தித்தபோது அந்த ஆலோசனை இடம்பெற்றது.

வரி தொடர்பான பிரச்சினை குறித்து சிங்கப்பூரும் அமெரிக்காவும் தற்போதைய ஈடுபாட்டைத் தொடர்வதன் அவசியம் குறித்து நியூ மெக்சிகோ ஆளுநரிடம் திரு வோங் விளக்கியதாக வியாழக்கிழமை (ஏப்ரல் 17) சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

சிங்கப்பூருடனான பொருளியல் உறவுகளை விரிவுபடுத்த திருவாட்டி லுஜான் கிறிஷாம் காட்டிய ஆர்வத்தை பிரதமர் வோங் வரவேற்றார்.

இருதரப்பு நலன்கள் தொடர்பான அம்சங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகள் குறித்து ஆளுநருடன் திரு வோங் கலந்து பேசியதாகவும் அறிக்கை தெரிவித்தது.

சிங்கப்பூருக்கு முதல் வருகை மேற்கொண்ட ஆளுநர் லுஜான், நியூ மெக்சிகோ வர்த்தகப் பிரதிநிதிகளையும் அழைத்து வந்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்