அண்மையில் சீஹுவா தொடக்கப்பள்ளியில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அடித்து துன்புறுத்துவது தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
அந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் அடித்த சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் சீஹுவா தொடக்கப்பள்ளி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் திங்கட்கிழமை தெரிவித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன்கருதி அவர்களின் பெற்றோருடனும் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாக பள்ளி கூறியது.
மாணவர்கள் சக மாணவர்களுக்கு உதவியாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்று பள்ளி கேட்டுக்கொண்டது. மாணவர்கள் யாரேனும் துன்புறுத்தப்பட்டால் அவர்கள் உடனடியாக ஆசியர்களை அணுக வேண்டும் என்றும் பள்ளி கேட்டுக்கொண்டது.
மாணவர் அடித்த சம்பவம் எப்போது நடந்தது என்பது பற்றிய முழு விவரங்களை கல்வி அமைச்சும் சீஹுவா பள்ளியும் தெரிவிக்கவில்லை.


