நண்பருக்காகத் தகவல்களைச் சட்டவிரோதமாகப் பெற்றுத் தந்த காவல்துறை அதிகாரி

நண்பருக்காகத் தகவல்களைச் சட்டவிரோதமாகப் பெற்றுத் தந்த காவல்துறை அதிகாரி

1 mins read
a6c3d79f-dfef-4a5e-a620-9e070ddd0c5b
திங்கட்கிழமை (ஏப்ரல் 27) நீதிமன்ற வளாகத்தில் சிவசூரியா மணியம் கேசவல், 28. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

போக்குவரத்துக் காவல்துறைப் புலனாய்வு அதிகாரியான சிவசூரியா மணியம் கேசவால், 28, உள்துறை அமைச்சின் கணினிக் கட்டமைப்புகளை முறையான அனுமதியின்றி அணுகிப் பெற்ற தகவல்களை நண்பருடன் பகிர்ந்தார்.

அந்தத் தகவல்களைப் பெற்ற பிரேய்டன் ஓங் யிங் ஷான், 25, தமக்கு எதிராகக் காவல்துறையிடம் புகார் அளித்திருந்த பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்.

வழக்கு விசாரணைக்குப் பிறகு, கணினிக் கட்டமைப்பைத் தவறாகப் பயன்படுத்திய நான்கு குற்றச்சாட்டுகள், அதிகாரபூர்வ ரகசியச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டு என சிவசூரியா மீதான ஐந்து குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதன்பேரில் மாவட்ட நீதிபதி லிம் சு ஹாவ் அவரைத் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.

சிவசூரியாவுக்குத் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) தண்டனை விதிக்கப்படும் என்றும் ஓங் தம்மீதான குற்றச்சாட்டுகளில் குறைந்தது ஒன்றையாவது ஒப்புக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களது வழக்குகள் ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஓங், சிவசூரியா இருவரையும் வழக்கறிஞர்கள் எவரும் பிரதிநிதிக்கவில்லை.

2022 ஆகஸ்ட்டில் சிவசூரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் காவல்துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது.

சிவசூரியாவும் ஓங்கும் 2019லிருந்து நண்பர்களாக இருந்துவந்தனர் என்றும் சிவசூரியா என்ன வேலை செய்கிறார் என்பது ஓங்கிற்குத் தெரியும் என்றும் அரசாங்கத் துணை வழக்கறிஞர் ஜெரமி பின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்