அதிகாரபூர்வமற்ற Police@SG செயலி குறித்து காவல்துறையில் புகார்

அதிகாரபூர்வமற்ற Police@SG செயலி குறித்து காவல்துறையில் புகார்

1 mins read
b27567ed-a8d0-49f8-ba8d-ecdab413da9a
படம்: காவல்துறை -

அதிகாரபூர்வமற்ற காவல்துறை செயலி (Police@SG) பற்றி காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்தப் போலி செயலி, மூன்றாம் தரப்பு செயலி இணையத்தளம் ஒன்றில் இடம்பெற்று இருந்தது. இந்த விவகாரம் பற்றி தனக்குத் தெரியும் என்று காவல்துறை ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

கூகல் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் போன்ற அதிகாரபூர்வமான தளங்களில் இருந்து காவல்துறை செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி பொதுமக்களுக்கு அது நினைவூட்டியது.

இதன் தொடர்பில் விவரம் கேட்டபோது, புகார் தாக்கலாகி இருப்பதாகவும் அந்த விவகாரம் பற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் காவல்துறை கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

கைப்பேசி போன்ற சாதனத்தில் இடைவிடாமல் வருகின்ற வேண்டுகோள் தகவல்களுக்குச் செவிசாய்த்து அனுமதி கொடுத்துவிட வேண்டாம் என்றும் இதன் தொடர்பில் விழிப்புடன் இருந்துகொள்ளும்படியும் மக்களுக்கு அது ஆலோசனை கூறியது.

குறிப்புச் சொற்கள்