மரிசா லாய் சின் லிங் எனும் 14 வயதுச் சிறுமி குறித்துத் தகவலறிந்தால் தெரிவிக்கும்படிக் காவல்துறை, சனிக்கிழமை (டிசம்பர் 20) கேட்டுக்கொண்டுள்ளது.
அச்சிறுமி கடைசியாக, வெள்ளிக்கிழமைப் பிற்பகல் 12.30 மணிவாக்கில் புளோக் 983 புவாங்கோக் கிரசென்ட்டில் அமைந்திருக்கும் புவாங்கோக் ஸ்கேட்பார்க் பகுதிக்கு அருகே காணப்பட்டதாகத் தெரிகிறது.
அப்போது அவர், கறுப்பு டி-சட்டையும் வெள்ளை வடிவங்கள் அச்சிடப்பட்ட நீண்ட, தளர்வான கறுப்புக் காற்சட்டையும் அணிந்திருந்ததாகக் காவல்துறை கூறியது.
சிறுமி குறித்துத் தகவலறிந்தோர் 1800-255-0000 என்ற நேரடித் தொலைபேசி எண் வாயிலாகக் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம். அல்லது www.police.gov.sg/i-witness எனும் இணைய முகவரியில் தகவல்களைச் சமர்ப்பிக்கலாம்.
அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது.

