விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைத் தேடும் காவல்துறை

விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைத் தேடும் காவல்துறை

1 mins read
ea190fc2-2760-450f-88af-22de10128d1b
விபத்தில் 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி கீழே விழுந்தார். அவர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  - ஃபேஸ்புக்/ JB TRAFFIC INFORMATION SHARING

சிலேத்தார் விரைவுச் சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரைக் காவல்துறை தேடிவருகிறது.

விபத்தில் 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி கீழே விழுந்தார். அவர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 28ஆம் தேதி பிற்பகல் 3.40 மணி வாக்கில் புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச் சாலையில் விபத்து ஏற்பட்டதாகத் தங்களுக்குத் தகவல் வந்தது என்று காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் சனிக்கிழமை (மே 2) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.

சம்பவ இடத்திற்குக் காவல்துறை சென்றபோது அங்கு லாரி ஓட்டுநர் இல்லை. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி சுயநினைவுடன் இருந்தார்.

ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்