பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகத்துக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.
தமது வாழ்த்துகளை அவர் இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.
அதில் அவர் ‘பொங்கலோ பொங்கல்’ என்று தமிழில் குறிப்பிட்டிருந்தார்.
மக்களுக்குத் தேவையானவற்றை அள்ளித் தரும் இயற்கைக்கு நன்றி சொல்ல பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவதை அவர் சுட்டினார்.
அதுமட்டுமல்லாது, பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் குடும்ப, சமூகப் பிணைப்பை வலுப்படுத்துவதாக திரு வோங் தெரிவித்தார்.
புதுமை, செழுமை ஆகியவற்றைத் தழுவும் அதே சமயத்தில் நமது பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து, அதைக் கௌரவிப்பது மிகவும் முக்கியம் என்று பிரதமர் வோங் வலியுறுத்தினார்.