தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போப்பாண்டவர் பிரான்சிஸ் சிங்கப்பூர் வருகிறார்

1 mins read
7766d9a0-4eed-4716-8587-91c1d529f399
போப்பாண்டவர் பிரான்சிஸ் பயணம் தொடர்பான தகவல்கள் குறித்து, சிங்கப்பூர் அரசாங்கம், ‘ஹோலி சீ’, உள்ளூர் தேவாலயங்கள் ஆகியவை கலந்தாலோசிக்கின்றன. - படம்: ஏஎஃப்பி

போப்பாண்டவர் பிரான்சிஸ் வரும் செப்டம்பர் 11 முதல் 13 வரை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வார்.

செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் வழிபாட்டுக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ஏப்ரல் 2ஆம் தேதியன்று, “சிங்கப்பூர், போப்பாண்டவர் பிரான்சிஸின் பயணத்தை வரவேற்கிறது,” என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அந்தப் பயணம் போப்பாண்டவர் ஒருவர் சிங்கப்பூருக்கு மேற்கொள்ளவிருக்கும் இரண்டாவது பயணமாகும்.

முன்னதாக, போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் வந்திருந்தபோது, அவர் ஐந்து மணி நேரம் மட்டுமே இங்கிருந்தார்.

போப்பாண்டவர் பிரான்சிஸ் பயணம் தொடர்பான தகவல்கள் குறித்து, சிங்கப்பூர் அரசாங்கம், ‘ஹோலி சீ’, உள்ளூர் தேவாலயங்கள் ஆகியவை கலந்தாலோசிக்கின்றன.

போப்பாண்டவரின் பயணம் தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்குக் கட்டங்கட்டமாக www.popefrancis2024.sg எனும் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்