பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்

1 mins read
e021c1f4-a18f-440b-ad1f-3f382264c199
நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம். - கோப்புப் படம்: மோசஸ் லிம்/ ஃபேஸ்புக்

சிங்கப்பூரின் பிரபல நகைச்சுவை நடிகரான மோசஸ் லிம் பிப்ரவரி 11ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 75.

புதன்கிழமை (பிப்ரவரி 12) காலை வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவில் அவரது மரணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

“இன்று, சிங்கப்பூர் மிகவும் பிரியமான பொழுதுபோக்கு நடிகரின் அசாதாரணமான வாழ்க்கையைக் கொண்டாடுகிறது. சிங்கப்பூரர்களின் தலைமுறையினருக்கு முடிவில்லாத சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தந்தவர் மோசஸ் லிம்,” என்று அவரது அஞ்சலியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திரு மோசஸ் லிம், ‘காமெடி நைட்’ என்ற சீன நிகழ்ச்சியின் மூலம் முதலில் பிரபலமானார்.

1995ஆம் ஆண்டிலிருந்து ‘அண்டர் ஒன் ரூஃப்’ தொலைக்காட்சி நகைச்சுவை தொடரில் நடித்து மறக்கமுடியாத நடிகரானார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்