தங்களிடம் மருத்துவக் காப்புறுதி வாங்கியோர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது அவர்களுக்கான முன்கூட்டியே வழங்கப்படும் அங்கீகாரச் சான்றிதழ் முறையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவனம் தெரிவித்திருந்தது.
கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் சுகாதார அமைச்சு கலந்துரையாடுகிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவக் காப்புறுதித் திட்டம் வைத்திருப்பவர்கள், அவர்களது காப்புறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பலன்களை முழுமையாகப் பெறும் முறை தொடர்வதைக் காப்புறுதி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
இந்நிலையில், தற்காலிக நிறுத்தம் ஜூன் 17லிருந்து நடப்புக்கு வரும் என்று தனது மருத்துவர் பட்டியலில் உள்ள மருத்துவர்களுக்கு கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவனம் அத்தகவலை இவ்வாரத் தொடக்கத்தில் தெரிவித்தது.
மற்ற தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவக் கட்டணம் அதிகமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவனம் கூறியது.
நோயாளிக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையையும் அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக காப்புறுதி நிறுவனம் உறுதிப்படுத்துவதே இந்த முன்கூட்டியே வழங்கப்படும் அங்கீகாரமாகும்.
சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு அது வழங்கப்படும்.
இதற்கிடையே, கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவு அதனிடம் மருத்துவக் காப்புறுதி வாங்கியோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கட்டணம் அதிகமுள்ள மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளும்போது அவற்றுக்கான செலவுகளைச் சமாளிப்பது குறித்து சிங்கப்பூரர்கள் அக்கறை கொள்கின்றனர் என்பது இதனால் தனக்குப் புரிகிறது என்றும் தனக்குப் புரிகிறது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
விலை அதிகமுள்ள மருத்துவக் கட்டணத்தில் கழிவுகளைத் தரும் வகையில் மெடிஷீல்டு லைஃப் மருத்துவக் காப்புறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அக்காப்புறுதித் திட்டம் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் உள்ளதாகவும் அமைச்சு கூறியது.