பாம்பு ஆண்டு நாணயம்: இன்று முதல் முன்பதிவு

பாம்பு ஆண்டு நாணயம்: இன்று முதல் முன்பதிவு

1 mins read
e68c66ce-f9dd-4a61-bbfb-9c390b4a1086
பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய பாம்பு ஆண்டுக் காசுகள். - படம்: சிங்கப்பூர் நாணய ஆணையம்

சீன நாள்காட்டியின்படி வரும் 2025ஆம் ஆண்டு பாம்பு ஆண்டாகும்.

அதனைச் சித்திரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பாம்பு ஆண்டு நாணயங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி விற்பனைக்கு வரும். சிங்கப்பூரின் நான்காவது சீன நாள்காட்டி நாணயத் தொடரில் (Singapore Fourth Chinese Almanac Coin Series) இந்தக் காசுகள் ஒன்பதாவது வெளியீடு என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 15) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இவற்றைப் பரிவர்த்தனைகளுக்குப் பய்னபடுத்தலாம். சீன ஜோதிட முறையில் பாம்பு ஆறாவது விலங்காகும்.

தெலுக் பிளாங்கா ஹில் பூங்காவில் உள்ள ‘ஹெண்டர்சன் வேவ்ஸ்’ (Henderson Waves) மேம்பாலத்தைப் பின்னணியாகக் கொண்ட பாம்பு வடிவம் புதிய நாணயங்களில் இடம்பெற்றுள்ளது.

பாம்பு ஆண்டுக் நாணயங்களை வாங்க வெள்ளிக்கிழமை முதல் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்யலாம். அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் அவை விநியோகிக்கப்படும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் குறிப்பிட்டது.

பாம்பு ஆண்டு, கடல்நாக ஆண்டு முடிந்தவுடன் வரும் ஜனவரி மாதம் 29ஆம் தேதியன்று தொடங்கும்.

குறிப்புச் சொற்கள்