தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபர் நட்சத்திர அறநிதி: $11.7 மில்லியனுக்கு மேல் திரட்டப்பட்டது

1 mins read
bf99cbcf-95d8-4b5b-bb1d-6eea441b6c05
அதிபர் நட்சத்திர அறநிதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்: (இடமிருந்து) ஸோயி டே, ஸ்டெஃபனி ஃபேம், அதிபர் தர்மன் சண்முகரத்னம், திருவாட்டி ஜேன் இட்டோகி, டயானா செர், ரிஷி புத்ராணி. - படம்: மீடியாகார்ப்

மீடியாகார்ப் நிறுவனத்தின் வருடாந்திர அதிபர் நட்சத்திர அறநிதி நிகழ்ச்சியில் $11,737,571 திரட்டப்பட்டது.

அந்த நேரடி நிதிதிரட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.

‘அனைவருக்கும் மரியாதை’ என்ற கருப்பொருளைக் கொண்ட அந்த நிகழ்ச்சியில், உள்ளூர், அனைத்துலகக் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றன.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான அதிபர் தர்மன் சண்முகரத்னமும், அவருடைய துணைவியார் ஜேன் இட்டோகியும் சிறப்பு அங்கம் ஒன்றில் மேடையேறி, கவிதை ஒன்றை வாசித்தனர்.

அதிபர் சவால் பயனாளர்களுக்கு அதிபர் நட்சத்திர அறநிதி பேராதரவு வழங்குகிறது. சிங்கப்பூரில் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு நிதி திரட்ட பொதுமக்களை ஒன்றிணைப்பதே அதன் நோக்கம்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் தாராளமாக நன்கொடை வழங்கினர். நவம்பர் 5ஆம் தேதிவரை நன்கொடைகள் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மீடியாகார்ப் தலைமை நிர்வாக அதிகாரி தாம் லொக் கேங்.

சென்ற ஆண்டு நிகழ்ச்சியில் சாதனை அளவாக $13,085,960 திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்