அதிபர் சவால் 2025: அடையாளம் காணப்பட்ட 12 புதிய வல்லுநர்கள்

2 mins read
634d5120-e558-4844-8ab3-510bcc4b674c
அதிபர் சவால் 2025இன் புதிய வல்லுநர் திட்டத்தின்வழி தொழில்நுட்பக் கல்விக் கழக பட்டம் பெற்ற 12 மாணவர்கள் பயனடைவர் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

அதிபர் சவால் 2025இன் புதிய வல்லுநர் திட்டத்தின்கீழ் உதவி பெறவுள்ள 12 பேர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) அறிமுகப்படுத்தப்பட்டனர்.

அத்திட்டத்தின்வழி 12 பேர் பயனடைவர் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

‘மீடியாகார்ப்’ அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற அதிபர் சவால் 2025 நிகழ்ச்சியில் 12 வல்லுநர்களை முன்னிலைப்படுத்தினார் அதிபர்.

“கடினமான சவால்களிலிருந்து மீண்டுவந்த சிலர் உட்பட பல்வேறு பின்னணியிலிருந்து வரும் வல்லுநர்களை கவனமாக தேர்ந்தெடுத்துள்ளோம்,” என்றார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 12 வல்லுநர்கள் குறித்து மனநிறைவு தெரிவித்த அதிபர், அவர்கள் முன்மாதிரிகளாகவும் சமூக மாற்றத்திற்கான முன்னோடிகளாகவும் உள்ளனர் என்று குறிப்பிட்டார்.

“இம்முயற்சி வெறும் தொண்டு மட்டுமன்று. சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் உட்பட அனைவரும் தங்கள் முழுப் பயனை அடைய உதவும் ஒன்று,” என்று சுட்டிக்காட்டினார்.

அண்மையில் சிங்கப்பூரை உலுக்கிய சிறுமி மேகன் குங்கின் மரணம், அதன் பின்னால் தொடர்ந்த நீண்ட, கொடுமையான வன்முறையைப் பற்றி தமது சமூக ஊடகப் பதிவில் அதிபர் தர்மன் குறிப்பிட்டுள்ளார்.

“மேகன், அவருக்குமுன் இதுபோன்ற வன்மத்தால் உயிரிழந்த குழந்தைகளின் துயரத்தை வேறு எந்தக் குழந்தையும் அனுபவிக்கக்கூடாது,” என்றார் அவர்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முக்கியமான நடவடிக்கைகளை சிங்கப்பூர் எடுத்து வருகிறது என்றும் திரு தர்மன் சொன்னார்.

ஆனால், ஒரு குழந்தையைப் பாதுகாக்க ஒருவரின் முயற்சி மட்டும் போதாது என்று வலியுறுத்திய அவர், அதிபர் சவால் வல்லுநர்களில் சிலர், “பல்வேறு துறைகளில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்; கடந்து வந்த சவால்களுக்கு இடையிலும் மற்றவர்களுக்கு உதவ விரும்புபவர்கள்,” எனக் குறிப்பிட்டார்.

அதிபர் சவால் 2025இன் புதிய வல்லுநர் திட்டத்தின்கீழ் பயனடைவோரில் ஒருவர் திரு செல்வராஜு ஆறுமுகம், 32.

சிறு வயதில் பெற்றோர் இருவரையும் இழந்த செல்வராஜு, தற்போது அதிபர் சவால் வல்லுநர் திட்டத்தின் உதவியுடன் முதுநிலை பட்டக்கல்வி மேற்கொள்ளவிருக்கிறார்.

“சிங்கப்பூரில் முன்னேற பல வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளை இறுகப் பற்றுவது அவசியம்,” என்று அவர் அறிவுறுத்தினார்.

அதிபர் சவால் 2025 நிகழ்ச்சியில் வல்லுநர்களை அறிமுகப்படுத்தியதோடு சுவாரசியமான ‘பிங் பாங்’ விளையாட்டு அங்கத்திலும் அதிபர் தர்மன் கலந்துகொண்டார்.

அதிபர் சவால் 2025இன் புதிய வல்லுநர் திட்டத்தின்வழி தொழில்நுட்பக் கல்விக் கழக பட்டம் பெற்ற 12 மாணவர்கள் பயனடைவர் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.
அதிபர் சவால் 2025இன் புதிய வல்லுநர் திட்டத்தின்வழி தொழில்நுட்பக் கல்விக் கழக பட்டம் பெற்ற 12 மாணவர்கள் பயனடைவர் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்