புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் நவம்பர் 9ஆம் தேதி ஆராதனையின்போது பாதிரியார் கிறிஸ்டஃபர் லீ தாக்கப்பட்டார்.
பாதிரியார் கத்தியால் தாக்கப்படுவதைக் கண்ட மக்கள் சந்தேக நபரை தாக்கவிடாமல் தடுத்தனர். இதனால் பாதிரியார் கிறிஸ்டஃபர் லீ பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
இந்நிலையில், உடல்நலம் தேறிய பாதிரியார் தம்மை சந்தேக நபரிடம் இருந்து காப்பாற்றியவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
நவம்பர் 17ஆம் தேதி வெளியான வழிபாட்டு வாரக்குறிப்பில் அதை பாதிரியார் கிறிஸ்டஃபர் லீ குறிப்பிட்டார்.
“தகுந்த நேரத்தில் சந்தேக நபரை தடுத்து வீரமாக செயல்பட்டு தம்மை காப்பாற்றியவர்களுக்கு நன்றி. கடினமான சூழலில் நான் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி,” என்று 57வயது பாதிரியார் கிறிஸ்டஃபர் லீ கூறினார்.
இதற்கிடையே செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை மறுஆய்வு செய்யவுள்ளதாக பாதிரியார் கிறிஸ்டஃபர் லீ தெரிவித்தார்.
தேவாலயம் பாதுகாப்பான, அனைவரையும் அரவனைக்கும் இடமாக இருக்கும் என்பதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை என்றார் அவர்.
இந்நிலையில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 37 வயது பஸ்நாயக கீத் ஸ்பென்சர் மீது, ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக நவம்பர் 11ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவரது வழக்கு டிசம்பர் 2ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.

