சிங்கப்பூர் வரும் இளவரசர் ஹேரி

சிங்கப்பூர் வரும் இளவரசர் ஹேரி

1 mins read
970e2bbc-12f3-475b-928f-ba8babce7929
இளவரசர் ஹேரி அறநிதி அமைப்புக்கு நிதி திரட்ட உதவுவதற்காக ‘போலோ’ விளையாட்டில் பங்கெடுக்கவுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

இளவரசர் ஹேரி வரும் ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் வரவிருக்கிறார்.

அவர் அறநிதி அமைப்புக்கு நிதி திரட்ட உதவுவதற்காக ‘போலோ’ விளையாட்டில் பங்கெடுக்கவுள்ளார்.

வருடாந்திர ‘செண்டபெல் ஐஎஸ்பிஎஸ் ஹாண்டா’ போலோ கிண்ணப் போட்டியில் 38 வயதான இளவரசர் ஹேரி கலந்துகொள்வார்.

போட்டி சிங்கப்பூர் போலோ மன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என்று செண்டபெல் அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது.

‘செண்டபெல்’ அறநிறுவனத்துக்கு நிதி திரட்ட அந்தப் போட்டி நடத்தப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக பிரிட்டிஷ் இளவரசரும் லெசோத்தோ இளவரசர் சீசோவும் 2006இல் அந்த அறநிறுவனத்தைத் தொடங்கிவைத்தனர்.

சிங்கப்பூர் போலோ குழுவுக்கு எதிராக, ‘ராயல் சலூட் செண்டபெல்’ குழுவிற்காக இளவரசர் ஹேரி விளையாடுவார்.

குழந்தைகளும் இளையோரும் உடல்நலத்துடனும் மீள்திறனுடனும் தழைத்தோங்கி இருப்பதை உறுதிசெய்ய, செண்டபெல் மேற்கொள்ளும் முக்கியப் பணிக்கு இந்த போலோ கிண்ணப் போட்டி இன்றியமையாததாக உள்ளது என்றார் இளவரசர் ஹேரி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்