பிரித்தம் சிங்கின் வழக்கறிஞர் உரிமம் பறிப்பு

பிரித்தம் சிங்கின் வழக்கறிஞர் உரிமம் பறிப்பு

1 mins read
1dbb6e1a-8686-4d51-95d7-e46d013d2bed
பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் (வலமிருந்து இரண்டாவது). - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்கான உரிமம் பறிக்கப்பட்டுள்ளது.

அவர் நாடாளுமன்றக் குழுவிடம் பொய்யுரைத்தது நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மூன்று நீதிபதிகள் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை வழங்கியது. அந்த நீதிமன்றம்தான் சட்டத் துறைக்கான ஆக உயரிய ஒழுங்குக் கட்டுப்பாட்டு அமைப்பாகும்.

தவறாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்களைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்ய அந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. தலைமை நீதிபதி சுந்தரே‌ஷ் மேனன், நீதிபதி கண்ணன் ரரே‌ஷ், நீதிபதி சீ கீ ஊன் ஆகியோர் அந்த நீதிபதிகள் குழுவில் இடம்பெற்றனர்.

அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சிங், தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அவரின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட 14,000 வெள்ளி அபராதத்தை அவர் செலுத்தினார்.

கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி, சட்டச் சங்கம் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பிரித்தம் சிங்வழக்கறிஞர்உரிமம்தீர்ப்புபாட்டாளிக் கட்சி