தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனியார் மனமகிழ் மன்றம் 1880 மீண்டும் திறக்கப்படுகிறது

1 mins read
5046e294-a1b3-4e8e-a7fd-dbe8e2c3f591
உணவகம், மதுபானக் கூடம், அழகு சிகிச்சைப் பகுதி, பணியிட வசதி போன்ற பல வசதிகளைக் கொண்ட தனியார் மனமகிழ் மன்றமான 1880 ஜூன் மாதம் 17ஆம் தேதி மூடப்பட்டது. - கோப்புப் படம்: பிஸினஸ் டைம்ஸ்

தனியார் மனமகிழ் மன்றமான ‘1880’ புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்படுவது குறித்து பேசப்படுவதாக சொகுசு வாழ்க்கை முறை, விருந்தோம்பல் குழுவான ஐகான்1சி (ICON1C) புதன்கிழமை ( செப்டம்பர் 3) அறிவித்தது.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் திடீரென மூடப்பட்ட ‘1880’ன் அறிவுசார் உடைமையை வாங்கியதாக ஐகான்1சி தெரிவித்துள்ளது. எனினும் கையகப்படுத்துதல் விலையை அது வெளியிடவில்லை.

அதன் தனிமுத்திரையையும் உரிமைகளையும் ‘மண்டலா’ மனமகிழ் மன்றம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு பேட்ரிக் க்ரோவ் நிறுவிய கோலாலம்பூரைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான கேட்சா, 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மண்டலா மனமகிழ் மன்ற நிறுவனர் பென் ஜோன்ஸ் உடன் இணைந்து ஐகான்1சி குழுமத்தைத் தொடங்கியது. உறுப்பினர்களின் மனமகிழ் மன்றங்கள், விருந்தோம்பல், சொகுசு அனுபவங்கள், விளையாட்டு நிகழ்வுகள், உடல்நலம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு குழுமம் அது.

மனமகிழ் மன்றத்திற்கான புதிய இடம் தேடப்படும் அதே வேளையில், முன்னாள் ஊழியர்கள், உறுப்பினர்களுடன் இணைந்து வாட்ஸ்அப்பில் ‘1880’ சமூகத்தை ஐகான்1சி அறிமுகப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் முதல், உறுப்பினர்கள் கலாசார நிகழ்வுகள், ஒத்துழைப்புகள் குறித்த புதுப்பிப்புகளைப் பெறுவார்கள், மேலும் புதிய மனமகிழ் மன்றம் திறப்பது குறித்து அறிவிப்புகளையும் பெறுவர்.

குறிப்புச் சொற்கள்