தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனியார் வீட்டு விற்பனை ஜூலையில் அதிகரிப்பு

2 mins read
5fa5b117-5bb6-4ae1-bf21-69cc2c295309
தனியார் வீடுகளின் விற்பனை கடந்த மாதம் அதிகரித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய தனியார் வீடுகளின் விற்பனை நான்கு மாத தொடர் சரிவுக்குப் பின் ஜூலை மாதத்தில் மீண்டும் வளர்ச்சிக் கண்டது. புதிய கூட்டுரிமை வீடுகள் விற்பனைக்கு வந்தது அதற்குக் காரணம்.

ஜூலையில் மொத்தம் 940 புதிய தனியார் வீடுகள் விற்பனையாகின. ஜூன் மாதம் அந்த எண்ணிக்கை 272 என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் குறிப்பிட்டது.

ஜூலையில் நிறுவனங்கள் நான்குத் திட்டங்களின் கீழ் 1,675 வீடுகளை அறிமுகம் செய்தனர். ஜூன் மாதம் இரண்டு முறை அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்களின் கீழ் 187 வீடுகள் மட்டும் விற்பனைக்கு வந்தன.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்புநோக்க இந்த ஆண்டு ஜூலையில் விற்பனையான தனியார் வீடுகளின் எண்ணிக்கை 63.2 விழுக்காடு கூடியது. கடந்த ஆண்டு ஜூலையில் 576 புதிய வீடுகள் விற்கப்பட்டன.

கூட்டுரிமை வீடுகள் உள்பட 1,311 புதிய தனியார் வீடுகள் ஜூலையில் விற்கப்பட்டன. ஜூன் மாதம் 305 வீடுகள் மட்டும் விற்கப்பட்டன.

அறிவியல் பூங்கா வட்டாரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லின்டன்வூட்ஸ் திட்டம் மூலம் விற்பனைகள் அதிகரித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

அந்தத் திட்டத்தின்கீழ் அறிமுகம் செய்யப்பட்ட 343 வீடுகளில் 96.5 விழுக்காடு விற்கப்பட்டது. அந்த விற்பனையில் ஒரு சதுர அடியின் விலை $2,463.

சிங்கப்பூர் அறிவியல் பூங்கா வட்டாரத்தில் ஈரறை வீடுகள் வாங்குவோரிடையே பிரபலமாக இருந்தன.

முதன்மை வட்டாரத்தில் மூன்றில் இரண்டு புதிய திட்டங்களில் விற்பனையான வீடுகள் விற்பனை உயர்ந்ததற்கு வித்திட்டன.

அப்பர்ஹவுஸ் வட்டாரத்தில் 53 விழுக்காட்டு வீடுகள் வாங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்