தனியார் சுகாதாரப் பராமரிப்பு காப்புறுதித் துறை, அளவுக்கு அதிகமான போட்டித்தன்மையால் தற்போது தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் இருப்பதாகச் சுகாதார துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் கூறியுள்ளார்.
காப்பீட்டாளர்கள், தனியார் மருத்துவமனைகள், காப்புறுதி நிறுவனங்கள் ஆகியவை ஒரே பிடியில் உள்ளதால் தனியார் மருத்துவக் கட்டணங்களும் காப்புறுதிச் சந்தாக்களும் உயர்வதுடன் காப்புறுதித் தொகையைப் பெற கூடுதல் கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
பிடியைத் தளர்த்த, தாராளமான காப்புறுதிகளை வழங்கும் கொள்கைகளை காப்புறுதி நிறுவனங்கள் மறுஆய்வு செய்யும்படி சுகாதார அமைச்சு அறிவுறுத்தியது.
காப்புறுதி நிறுவனங்கள் தற்போது எதிர்கொள்ளும் நிலை போட்டித்தன்மையால் ஏற்படவில்லை என்று திருவாட்டி ரஹாயு குறிப்பிட்டார்.
மாறாக, ஒருங்கிணைந்த ஷீல்ட் திட்ட (ஐபி) காப்பீட்டாளர்கள் நட்டங்களைச் சந்திக்கின்றனர் என்றார் அவர்.
ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டம் என்பது ஏழு தனியார் காப்புறுதி நிறுவனங்கள் வழங்கும் தனியார் மருத்துவ காப்புறுதித் திட்டம். அது தேசிய மெடிஷீல்ட் லைஃப் திட்டத்துக்கு மேல் கொடுக்கப்படுகிறது.
மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டாலோ ஒருசில வெளிநோயாளி சிகிச்சைகளுக்கோ மெடிஷீல்ட் லைஃப் காப்புறுதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தனியார் சுகாதார காப்புறுதித் திட்டங்களின் வடிவமைப்புதான் தற்போதைய சூழலுக்கான மூல காரணம் என்றார் திருவாட்டி ரஹாயு.
தொடர்புடைய செய்திகள்
காப்பீட்டாளர்கள் தாராளமான ஐபி திட்டம், ரைடர் திட்டம் மூலம் தாராளமான சலுகைகளைக் கொடுக்கின்றனர் என்ற அவர், கடைசிக் காசு வரை மருத்துவச் செலவுகளுக்குக் காப்புறுதித் தொகையைக் கொடுக்கின்றனர்.
சொல்லப்போனால் காப்பீட்டாளர்கள்தான் கிட்டத்தட்ட மொத்த மருத்துவக் கட்டணத்துக்குமான தொகையைச் செலுத்துகின்றனர் என்றும் தேவையற்ற சிகிச்சைகளுக்கும் கட்டணம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரைடர் திட்டத்தில் இல்லாதோருடன் ஒப்புநோக்க தனியார் மருத்துவமனை ரைடர் திட்டத்தில் உள்ளோர் 1.4 மடங்கு அதிகமான தொகைக்கு விண்ணப்பம் செய்கின்றனர்.