துடிப்புடனும் சமூக ரீதியாக இணைந்திருக்கவும் முதியோருக்கான திட்டம் விரிவாக்கம்

துடிப்புடனும் சமூக ரீதியாக இணைந்திருக்கவும் முதியோருக்கான திட்டம் விரிவாக்கம்

2 mins read
f0497f39-c4d7-4d95-b710-8583cd0b7424
‘நெய்பர்ஹூட் காக்கிஸ்’ மேலும் பல குடியிருப்புப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று சனிக்கிழமையன்று (ஏப்ரல் 4) புதிய மவுண்ட்பேட்டன் சமூக மன்றத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2024ஆம் ஆண்டு முதல், முதியோர் பலர் தங்கள் குடியிருப்புப் பேட்டைகளில் தனியாக வாழும் மற்ற முதியோருக்கு உணவைப் பொட்டலம் கட்டி விநியோகிப்பது, குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்களை விநியோகித்தல், சமூக குளிர்சாதனப் பெட்டிகளில் பொருள்களை நிரப்புதல் போன்ற எளிய பணிகளைச் செய்து வருகின்றனர்.

10 அடித்தளத் தொகுதி அலுவலகங்களுக்குக் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னோட்டத் திட்டமாக ‘நெய்பர்ஹூட் காக்கிஸ்’ உள்ளது. இதுவரை 1,400க்கும் மேற்பட்ட முதியோர்கள் இதில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஒரு பணிக்கு $2 பெற்று, 20 பிரிவுகளின் கீழ் 30,000க்கும் மேற்பட்ட பணிகளை முடித்துள்ளனர்.

முதியோரைத் துடிப்புடனும் சமூக ரீதியாக இணைக்கப்பட்டவர்களாகவும் தங்கள் சமூகங்களில் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்தவும் இலக்கு கொண்டுள்ள மக்கள் கழகத்தின் இந்தத் திட்டம், இப்போது மேலும் பல குடியிருப்புப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று சனிக்கிழமையன்று (ஏப்ரல் 4) புதிய மவுண்ட்பேட்டன் சமூக மன்றத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்தார்.

“பரந்த அளவில், முதியோரைத் தொடர்ந்து ஈடுபடுத்த மிகவும் ஆர்வமாக உள்ளோம், அவர்கள் ஆரோக்கியமாகவும் சமூக ரீதியாக இணைக்கப்பட்டவர்களாகவும் மனதளவில் துடிப்புடன் இருக்க அவர்களை ஊக்குவிப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம்,” என்று உள்துறை இரண்டாம் அமைச்சரும் மக்கள் கழகத்தின் துணைத் தலைவருமான திரு டோங் கூறினார்.

50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பல வழிகளில் தொடர்ந்து சமூகத்துக்குச் சேவையாற்ற முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

‘நெய்பர்ஹூட் காக்கிஸ்’ முன்னோட்டத் திட்டத்தில் பங்கேற்கும் 10 அடித்தளத் தொகுதி அலுவலகங்கள் பிடோக், பூன் லே, ஜூ சியாட், கெம்பாங்கான், கிரேட்டா ஆயர்-கிம் செங் , மரின் பரேட் , செம்பவாங் சென்ட்ரல், தெம்பனிஸ் சாங்காட், தஞ்சோங் பகார்-தியோங் பாரு தோ பாயோ சென்ட்ரல் ஆகிய வட்டாரங்களில் உள்ளன.

“2026ஆம் ஆண்டு இறுதிக்குள், சிங்கப்பூரின் அனைத்துத் தொகுதிகளும் இதில் இணையும், மேலும் நாம் அனைவரும் ‘நெய்பர்ஹூட் காக்கிஸ்’ திட்டத்தைப் பயன்படுத்த முடியும்” என்று திரு டோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்