சிங்கப்பூரில், ஆசியான் மின்சாரக் கட்டமைப்பு மேலும் இரண்டு முக்கிய முன்னேற்றங்களை வெள்ளிக்கிழமை (மே 30) அறிவித்துள்ளது.
முதலாவதாக, இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே புதிய கடலடி மின்சாரக் கம்பிவடத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
2035ஆம் ஆண்டுக்குள் இந்தோனீசியாவிலிருந்து ஆறு கிகவாட் வரையிலான குறைந்த கரிம மின்சாரத்தைப் பெறத் திட்டமிட்டுள்ள சிங்கப்பூருக்கு அந்த உள்கட்டமைப்பு உதவியாக இருக்கும். அது நாட்டின் எரிசக்தித் தேவையில் மூன்றில் ஒரு பங்கு.
இரண்டாவதாக, எல்லைத் தாண்டிய எரிசக்தி உள்கட்டமைப்பை உருவாக்க புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட அரசாங்கத் தொடர்புடைய சிங்கப்பூர் எரிசக்தி இணைப்புகள் நிறுவனத்தை அரசாங்கம் நியமித்துள்ளது.
வட்டாரத்தில் உள்ள நாடுகள் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஒன்று மற்றதுடன் பகிர்ந்துகொள்வதற்கு அத்தகைய உள்கட்டமைப்பு வழியமைக்கிறது.
சிங்கப்பூரின் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங், பிரான்ஸின் பொருளியல், நிதி, வர்த்தக அமைச்சர் எரிக் லம்பார்ட் ஆகியோரின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
திட்டமிடல், மேம்பாடு, நிதி, கட்டுமானம், செயல்பாடு ஆகியவை குறித்து இரு நிறுவனங்களும் ஆராயவேண்டும் என்பதில் இணக்கக் குறிப்பு கவனம் செலுத்துகிறது.
சிங்கா ரினியூபல்ஸ் (Singa Renewables) நிறுவனம், மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்தோனீசியாவில் கொட்டிக்கிடக்கும் சூரியசக்தி வளங்ககளைப் பயன்படுத்தும் என்று சிங்கப்பூர் எரிசக்தி இணைப்புகள் நிறுவனம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்தோனீசியாவிலிருந்து சிங்கப்பூருக்கும் 1 கிகாவாட் அளவிலான குறைந்த கரிம மின்சாரத்தை இறக்குமதி செய்ய சிங்கா ரினியூவபல்ஸ் நிறுவனத்துக்கு எரிசக்திச் சந்தை ஆணையம் ஒப்புதலுடன் கூடிய உரிமத்தை வழங்கியுள்ளது.
ராங்சாங் தீவில் உள்ள அந்தத் திட்டம் 2029ஆம் ஆண்டுக்குள் வர்த்தகச் செயல்பாட்டை அடைய இலக்குக் கொண்டுள்ளது.
வட்டார அளவிலான கட்டமைப்பு இயற்கை எரிசக்தி வளங்களை நாடுகள் பகிர்ந்துகொள்ள வகைசெய்யும். அவை தற்போது வட்டார அளவில் சமமாக விநியோகம் செய்யப்படவில்லை.

