கா சண்முகம், 66
மக்கள் செயல் கட்சி நீ சூன் குழுத்தொகுதி அமைச்சர், 31 ஆண்டு அரசியல் அனுபவம்
‘குடியிருப்பாளர்களுக்கு முன்னுரிமை’ எனும் நீ சூன் குழுத்தொகுதி அறிக்கையில், போக்குவரத்து இணைப்புகளில் மேம்பாடு, கூடுதல் பாலர் பராமரிப்பு வசதிகள், உடற்பயிற்சி, விளையாட்டு இடங்கள் மேம்பாடு உள்ளிட்டவை உத்தேசத் திட்டங்களாக இடம்பெற்றுள்ளன.
ஹரிஷ் பிள்ளை, 65
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி புக்கிட் கோம்பாக் தனித்தொகுதி தொழில்நுட்ப வல்லுநர் 2வது பொதுத்தேர்தல்
மின்னிலக்க, தொழில்நுட்ப இடைவெளியைக் களைவதும் நகர மன்றத்தில் தொழில்நுட்ப மலர்ச்சியை ஏற்படுத்துவதும் இவர் எண்ணம்.
விவியன் பாலகிருஷ்ணன், 64
மக்கள் செயல் கட்சி ஹாலந்து- புக்கிட் தீமா குழுத்தொகுதி அமைச்சர் 24 ஆண்டு அரசியல் அனுபவம்
வருங்கால சந்ததியினரின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது விவியனின் இலக்கு.
இந்திராணி ராஜா, 62
மக்கள் செயல் கட்சி பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி அமைச்சர் 24 ஆண்டு அரசியல் அனுபவம்
இந்திய சமூகத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் நிலையான வாய்ப்புகளை உருவாக்குவதும் இவரது குறிக்கோள்.
தொடர்புடைய செய்திகள்
டாக்டர் ஜேம்ஸ் கோமெஸ், 60
பாட்டாளிக் கட்சி செம்பவாங் குழுத்தொகுதி அரசியல் அறிஞர் 19 ஆண்டு அரசியல் அனுபவம்
விலைவாசி உயர்வுக்குப் பற்றுச்சீட்டுகள் தீர்வல்ல எனக் கருதும் ஜேம்ஸ் கோமெஸ், இளம் தம்பதியர், முதியோர், வசதிகுறைந்த குடும்பங்கள் என அனைவருக்காகவும் குரல்கொடுக்க விரும்புகிறார்.
நல்லகருப்பன், 60
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி சுவா சூ காங் குழுத் தொகுதி பட்டயக் கணக்காளர் 2வது பொதுத் தேர்தல்
இளம் சிங்கப்பூரர்களுக்கு சிறந்ததொரு வேலை வாய்ப்பை நல்கும் அளவிற்கு சிங்கப்பூரின் கல்விமுறையை உறுதி செய்வது இவரது இலக்கு.
டாக்டர் பால் தம்பையா, 60
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி மருத்துவ நிபுணர் 3வது பொதுத் தேர்தல்
பொருள் சேவை வரியை 7 விழுக்காட்டுக்குக் குறைப்பது, கட்டுப்படியாகக்கூடிய மருத்துவப் பராமரிப்பு, பசுமை வளங்களுக்கு மரியாதை, குடியேற்றத்தில் கட்டுப்பாடு போன்ற மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறார்.
நடராஜன் செல்வமணி, 59
சீர்திருத்த மக்கள் கூட்டணி தஞ்சோங் பகார் குழுத்தொகுதி தனியார் பள்ளியின் இயக்குநர் முதல் பொதுத் தேர்தல்
குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு இலவசக் கல்வி, துப்புரவு பணி செய்யும் முதியோருக்கு சம்பளம் உயர்வு ஆகியவை இவர் முன்வைக்கும் கோரிக்கைகள்.
ஹர்பிரீத் சிங் நேஹால், 59
பாட்டாளிக் கட்சி பொங்கோல் குழுத்தொகுதி வழக்கறிஞர், முதல் பொதுத் தேர்தல்
நிதிப் பாதுகாப்புடன் முதியோர் கெளரவத்துடன் ஓய்வுபெறுவதை உறுதிப்படுத்தல், எதிர்காலத்துக்குத் தயார்ப்படுத்தும் கல்விக் கட்டமைப்பு, இன்னும் சமமான அரசியல் போன்றவை இவர் நாடுவது.
முரளி பிள்ளை, 57
மக்கள் செயல் கட்சி ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி, துணையமைச்சர் 10 ஆண்டு அரசியல் அனுபவம்
மூத்தோரின் நலன், துடிப்புடன் மூப்படைதலில் கவனம்; உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புக்கிட் பாத்தோக்கில் பல இடங்களில் உணவு விநியோக இயந்திரங்களை நிறுவுவதும் இவர் முன்னெடுக்க உள்ளவை.
மஹபூப் பாட்ஷா, 57
சீர்திருத்த மக்கள் கூட்டணி குவீன்ஸ்டவுன் தனித்தொகுதி நிறுவன இயக்குநர், முதல் தேர்தல்
குவீன்ஸ்டவுனில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு வேலை கிடைப்பதற்கு உதவுவது இவரது குறிக்கோள்.
இரவிச்சந்திரன் ஃபிலமன், 57
ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி நீ சூன் குழுத்தொகுதி ஊடக நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் 3வது பொதுத் தேர்தல்
சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, பொருள் சேவை வரியைக் குறைப்பது இவரது இலக்குகள்.
தமிழ்செல்வன் கருப்பையா, 57
தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி தெம்பனிஸ் குழுத் தொகுதி சுய தொழில், முதல் பொதுத் தேர்தல்
பொறுப்பான கொள்கைகளைத் திறம்பட வகுக்கக்கூடியதொரு ஆக்ககரமான எதிர்க்கட்சியைத் தேர்ந்து எடுக்க விரும்பினால் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சிக்கு வாக்களிக்கலாம் எனும் முழக்கத்துடன் தேர்தலைச் சந்திக்கவுள்ளார் இவர்.
குமார் அப்பாவு, 56
சீர்திருத்த மக்கள் கூட்டணி ராடின் மாஸ் தனித்தொகுதி தொழில் அதிபர், 2வது பொதுத் தேர்தல்
நகர மன்றத்தின் சேவை, பராமரிப்புக் கட்டணங்களைக் குறைப்பதும் தனது தொகுதி உணவு, பானக் கடைகளுடன் பேசி அனைவரையும் சமையலுக்கான மூலப் பொருள்களை ஒட்டுமொத்தமாக வாங்க ஊக்குவித்து விலையைக் குறைப்பது இவரது திட்டம்.
டேரல் டேவிட், 54
மக்கள் செயல் கட்சி அங் மோ கியோ குழுத்தொகுதி அனைத்துலகப் பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி 10 ஆண்டு அரசியல் அனுபவம்
சிறந்த ஆரம்பகாலக் கல்வி குழந்தைகள் சிறந்து விளங்கக் கைகொடுக்கும் என்று டேரில் நம்புகிறார். குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை வெற்றி பெற்றவர்களாக வளர்க்க தேவையான வளங்களை வழங்குவதில் அக்கறை கொண்டுள்ளார்.
ஹர்மிந்தர்பால் சிங், 53
சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி பாசிர் ரிஸ்-சாங்கி குழுத் தொகுதி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி 10 ஆண்டு அரசியல் அனுபவம்
உணவங்காடிகள், கடைத்தொகுதிகளுக்கான வாடகைகள் இவர் முன்னெடுத்துச் செல்ல விழையும் முக்கிய விவகாரம். நில உரிமையாளர்கள் நியாயமான, நிலைத்தன்மை வாய்ந்த வகையில் வாடகைகளை வைத்திருக்க உறுதி செய்யக் குரல் கொடுப்பது இவரது விருப்பம்.
ரித்வான் சந்திரன், 53
சிங்கப்பூர் ஐக்கியக் கட்சி அங் மோ கியோ குழுத்தொகுதி விரிவுரையாளர், முதல் பொதுத்தேர்தல்
பதினான்கு அல்லது அதற்கும் குறைவான வயதுடையோர்க்கும், 67 வயதுக்கு மேற்பட்டோர்க்கும் இலவச மருத்துவப் பராமரிப்பு வழங்க வலியுறுத்துவது இவர் கொண்டிருக்கும் இலக்குகளில் ஒன்று.
ஜனில் புதுச்சேரி, 52
மக்கள் செயல் கட்சி பொங்கோல் குழுத்தொகுதி மூத்த துணை அமைச்சர் 14 ஆண்டு அரசியல் அனுபவம்
பொங்கோல் வட்டாரக் குடியிருப்பாளர்கள் வசதியை மேம்படுத்துவதும் அவர்கள் நேரடியாகப் பயனடையக்கூடிய சூழலை உருவாக்குவதும் உள்ளூர் வணிகங்களை வலுப்படுத்துவதும் டாக்டர் ஜனில் சாதிக்க நினைப்பவை.
கலா மாணிக்கம், 52
ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதி முன்னாள் சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரி, 2வது பொதுத் தேர்தல்
கட்டுப்படியாகக்கூடிய விலையில் வீடுகள், வேலைப் பாதுகாப்பு, இவற்றை முக்கிய அக்கறையாகக் கொண்டு களமிறங்குகிறார் கலா மாணிக்கம்.
பெரிஸ் வி பரமேஸ்வரி, 51
பாட்டாளிக் கட்சி ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி முன்னாள் அமெரிக்கக் கடற்படை அதிகாரி, முதல் பொதுத் தேர்தல்
வீவக வீடுகளின் இன ஒருங்கிணைப்புக் கொள்கையை நீக்குவது, தைப்பூசத் திருநாளை பொது விடுமுறையாக்குதல் போன்ற கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாகக் கூறி உள்ளார்.
தினேஷ் வாசு தாஸ், 50
மக்கள் செயல் கட்சி ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (ஏஐசி) முன்னாள் தலைமை நிர்வாகி முதல் பொதுத்தேர்தல்
சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தை மேலும் ஒன்றிணைக்கும் வழிகளைக் கண்டறிவது, மூத்தோருக்கு கூடுதல் செயல்திட்டங்களை அறிமுகம் செய்வது, வேலையற்றோர், குறைந்த வருவாய் உடையோருக்கு உதவி செய்வது இவரது விருப்பம்.
பிரித்தம் சிங், 48
பாட்டாளிக் கட்சி அல்ஜுனிட் குழுத்தொகுதி வழக்கறிஞர் 14 ஆண்டு அரசியல் அனுபவம்
மக்கள் நலன் சார்ந்து, அவர்களின் குரல் செவிமடுக்கப்படுவதற்கு சமநிலையுடன்கூடிய நாடாளுமன்றமும் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு எதிர்க்கட்சிகள் பிரதிநிதித்துவமும் திரு பிரித்தம் சிங் ஏற்படுத்த நினைக்கும் மாற்றம்.
விக்ரம் நாயர், 46
மக்கள் செயல் கட்சி செம்பவாங் குழுத்தொகுதி வழக்கறிஞர் 14 ஆண்டு அரசியல் அனுபவம்
தமிழ் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகாண தமிழாசிரியர் சங்கத்தின் ஆலோசகராக முயற்சி செய்கிறார். தமிழ்மொழி கற்றல் வளர்ச்சி குழுவின் தலைவராக வகுப்பறைக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் தமிழில் பேசுவதை ஊக்குவிக்க விரும்புகிறார்.
தாடியஸ் தாமஸ், 43
மக்கள் சக்திக் கட்சி அங் மோ கியோ குழுத்தொகுதி கட்டுமானத்துறை பாதுகாப்பு அதிகாரி முதல் பொதுத் தேர்தல்
வேலைவாய்ப்பில் சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் சமநிலை காணத் திட்டமிட்டுள்ளார்.
விக்னேஸ்வரி ராமச்சந்திரன், 43
சீர்திருத்த மக்கள் கூட்டணி ஜாலான் புசார் குழுத்தொகுதி பாலர் பள்ளி ஆசிரியர் மூன்றாவது பொதுத் தேர்தல்
வசதி குறைந்தோர்க்கு இன்னும் கூடுதல் உதவி செய்ய வேண்டும் என்று கூறுகிறார் இவர். வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க நிதி நிர்வாக வல்லுநர்களின் ஆலோசனையே போதும். நிதியிருப்பில் கைவைக்கத் தேவையில்லை என்பது இவரது கருத்து.
ஹமீது ரசாக், 39
மக்கள் செயல் கட்சி வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி, அறுவை சிகிச்சை நிபுணர் முதல் பொதுத்தேர்தல்
தமிழ்ச் சமூகத்தின் ஆதரவுடன் பிள்ளைகளைச் சரளமாகத் தமிழ் மொழியைப் பேச வைக்கத் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் திட்டமிடுகிறார்.
ஹரீஷ் மோகனதாஸ், 39
ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதி, மென்பொருள் பொறியியலாளர் முதல் பொதுத் தேர்தல்
உண்மையான அரசியல் போட்டியை விரும்பும் ஹரீஷ், சிங்கப்பூரர்களில் வாழ்க்கையிலும் வாழ்வாதாரத்திலும் சிறந்த மேம்பாடு காண விழைகிறார்.
பிரபு ராமச்சந்திரன், 37
சீர்திருத்த மக்கள் கூட்டணி தஞ்சோங் பகார் குழுத்தொகுதி வங்கியாளர், 2வது பொதுத் தேதல்
பள்ளி மாணவர்களுக்கு உணவு, இலவசக் கல்வி, இலவச மருத்துவப் பராமரிப்பு ஆகியவை இவரது விருப்பம்.
அரிஃபின் ஷா, 27
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி மார்சிலிங்- இயூ டீ குழுத்தொகுதி சட்டத்துறை நிர்வாகி முதல் பொதுத் தேர்தல்
பிரதமர் போட்டியிடும் தொகுதியில் வாக்கு விகிதம் குறையக் குறைய, அரசாங்கம் இன்னும் கூடுதலாக மக்கள் நலனுக்காகப் பாடுபடும் என நம்பும் அரிஃபின் ஷா, அதுவே தான் ஏற்படுத்த விழையும் மாற்றம் என்றார்.
சரத் குமார், 25
ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி துணைப் பொறியியலாளர் முதல் பொதுத்தேர்தல்
அனைவரையும் பிரதிபலிக்கும் சிங்கப்பூரைக் கட்டியெழுப்புவதில் இவருக்கு நம்பிக்கை. பருவநிலை மாற்றம், மனநல சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்கும் இவர் மனதில் இடம் உண்டு.
வியர் நேதன், 25
மக்கள் சக்திக் கட்சி தெம்பனிஸ் குழுத் தொகுதி நில அமைவு வடிவமைப்பாளர் முதல் பொதுத் தேர்தல்
இயற்கை வழிகாட்டி, தற்காப்புப் பயிற்றுவிப்பாளர், பண்ணை நிறுவனர் எனப் பலதரப்பட்ட பின்புலம் கொண்ட இவர் தனது அனுபவத்தின் உதவியுடன் சிங்கப்பூருக்குப் கூடுதலான ஆற்றலுடன் பணியாற்ற விரும்புகிறார்.
ஜெகதீஸ்வரன் ராஜு, 37
மக்கள் செயல் கட்சி அல்ஜுனிட் குழுத்தொகுதி தொழிற்சங்கவாதி முதல் பொதுத்தேர்தல்
பெற்றோர், மூத்தோர், பிள்ளைகள் எனப் பலரைப் பார்த்துக்கொள்ளும் பராமரிப்பாளர்களின் மனநல மேம்பாடே நாடாளுமன்ற உறுப்பினராகக் தாம் குரலெழுப்ப விழையும் முக்கிய அம்சம் என்கிறார் முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் ஜெகதீஸ்வரன் ராஜு.
தொகுப்பு: இளவரசி ஸ்டீஃபன், ரவி சிங்காரம், கி.ஜனார்த்தனன், லாவண்யா வீரராகவன், யோகிதா அன்புச்செழியன், கீர்த்திகா ரவீந்திரன், அனுஷா செல்வமணி.
வரைகலை: த.கவி