சிங்கப்பூரின் வீடு வைத்திருப்போர் விகிதம் செல்வச் சமமின்மைக்குத் தீர்வு; மாற்றங்கள் தேவை

சிங்கப்பூரின் வீடு வைத்திருப்போர் விகிதம் செல்வச் சமமின்மைக்குத் தீர்வு; மாற்றங்கள் தேவை

2 mins read
c14304a5-d9c1-4554-8578-b4377626c154
பிஎல்எச் கட்டமைப்பின்கீழ் கட்டப்படும் திட்டங்களில் ஒன்று. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு என்பது தங்குவதற்கு இடம் தரும் அம்சம் என்பதோடு செல்வம் சேர்ப்பது, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மெருகூட்டும் முக்கிய அம்சமாகவும் விளங்குகிறது; இதை முக்கியமாகச் சார்ந்தே சிங்கப்பூரின் சமூக இணக்கம் இருக்கிறது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளியல் கொள்கைகள், அனைவரையும் உள்ளடக்கும் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வந்துள்ளன. அதன்படி பல்வேறு துறைகளில் சம்பளம் உயர்த்தப்பட்டிருக்கிறது, தேவைப்படும் இடங்களில் அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு உதவி செய்து வந்துள்ளது.

எனினும், வருமானம் என்பது ஓர் அம்சம் மட்டுமே. வருமானம் மட்டுமின்றி செல்வமும் நீண்டகாலத்தில் பாதுகாப்பை உறுதிசெய்து வாய்ப்புகளை உருவாக்க வகைசெய்கிறது.

வேலை வருமானத்தைக் கணக்கிடும் கினி கோஎஃபி‌ஷியென்ட் (Gini coefficient) குறியீடு சென்ற ஆண்டு 0.359க்குக் குறைந்ததாக இவ்வாண்டு பிப்ரவரி மாதத்துக்கான நிதி அமைச்சின் ஆய்வறிக்கையில் தெரிய வந்தது. இது, வருமான சமமின்மை குறைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை பொருளியல் ரீதியான வாய்ப்புகள் கூடுமானவரை சமமாக இருப்பதில் அரசாங்க வீடமைப்புத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சிங்கப்பூரில் செல்வத்துக்கான கினி கோஎஃபி‌ஷியென்ட் 0.55ஆக இருக்கிறது. அதேவேளை இது, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் பதிவாகும் 0.6லிருந்து 0.7க்கு இடைப்பட்ட குறியீட்டைக் காட்டிலும் குறைவாகும்.

வீடமைப்பு மானியங்கள், மத்திய சேமநிதிக் கொள்கைகள், அதிகமானோர் வீட்டு உரிமையாளர்களாக இருப்பது ஆகிய அம்சங்களால் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களும் எதிர்பார்க்கப்படுவதைவிட அதிக சொத்துகளைச் சேர்த்துள்ளதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அந்த வகையில், சிங்கப்பூரில் அவரவர் சொந்த வீடு வைத்திருக்க வழி இருப்பது செல்வச் சமமின்மையைக் கையாள உதவும் முக்கிய அம்சமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.

எனினும், சந்தை நிலவரம், சமுதாயக் கட்டமைப்பு ஆகியவை மாறிவரும்போது எப்படி இதே முறையைக் கொண்டு செல்வச் சமமின்மையைக் கையாள்வது என்ற கேள்வி எழுகிறது.

இதற்குத் தீர்வாக இருக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டதுதான், 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பின்னர் 2023ல் அதிகாரபூர்வமாக ஆக்கப்பட்ட முக்கியப் பகுதி பொது வீடமைப்புக் கட்டமைப்பு (பிஎல்எச்). இதன்கீழ் உள்ள பிரிவுகள் சிலவற்றில் தனியார் வீடுகளை உருவாக்கப் பயன்படுத்தப்படக்கூடிய முக்கியப் பகுதிகள் அரசாங்க வீடுகளுக்காக உபயோகிக்கப்படுகின்றன.

கிரேட்டர் சவுதர்ன் வாட்டர்ஃபிரன்ட் நீர்முகப்புப் பகுதியில் அமைந்திருக்கும் பெர்லாயா ரெசிடன்சஸ், தங்ளின் ரோட்டில் உள்ள அலெக்சாண்ட்ரா விஸ்டா போன்ற திட்டங்கள் இதற்கு உதாரணங்கள்.

பிஎல்எச் கட்டமைப்பு வீடுகளுக்கான குறைந்தபட்ச குடியிருப்புக் காலகட்டம் 10 ஆண்டுகளாக இருப்பது, நிலைத்தன்மையை வளர்க்கவும் சமத்துவத்தை மேம்படுத்தவும் வகைசெய்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, 2021லிருந்து 2025ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விற்பனைக்கு விடப்பட்ட 100,000 தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளில் 35 விழுக்காடு வீடுகள் பிஎல்எச் கட்டமைப்பில் வருபவையாகும். காலப்போக்கில் மத்தியப் பகுதிகளில் போதுமான நிலம் இல்லாமல் போகும்போது இவ்விகிதம் இயல்பாகவே குறையும்.

எனினும், நகரின் வளர்ச்சியில் பல தரப்பினர் ஈடுபடவேண்டும் என்று ஆரம்பக் கட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட இலக்குக்குத் தோதாக விளங்குகின்றன, பிஎல்எச் கட்டமைப்பின்கீழ் முக்கியப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள்.

குறிப்புச் சொற்கள்