தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரர்களின் மரபணுத் தரவுகளைப் பாதுகாக்க புதிய சட்டம் பரிந்துரை: ஓங் யி காங்

2 mins read
3a7e1c3e-87a2-40fc-97fa-2b41991873fc
சுகாதார புத்தாக்கத்திற்கான இங் டெங் ஃபோங் மையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற தேசிய சுகாதாரக் குழுமத்தின் புத்தாக்க மாநாட்டில் அமைச்சர் ஓங் பேசினார்.  - படம்: சாவ் பாவ்
multi-img1 of 2

சிங்கப்பூரர்களிடமிருந்து திரட்டப்படும் மரபணுத் தரவுகளைப் பாதுகாக்க முன்மொழியப்பட்ட புதிய சட்டம் வலுப்படுத்தப்படும். அத்தரவுகள் எதற்குப் பயன்படுத்தப்படலாம் அல்லது பயன்படுத்தப்பட முடியாது என்பது குறித்த கூடுதல் தெளிவை இது வழங்கும்.

இதுகுறித்து சுகாதார அமைச்சு விரிவான பொதுக் கலந்துரையாடல்களை நடத்தும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வியாழக்கிழமை (ஜூலை 10) தெரிவித்துள்ளார்.

“அனைத்துச் சூழல்களிலும் குறிப்பாக சமூகத்தில், சுகாதாரப் பராமரிப்பு தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றால், நோயாளியின் தரவுகள் சேமிக்கப்பட்டு, அந்நோயாளி நாடும் சுகாதார சேவை வழங்குநர்களிடையே பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.

இது இணையப் பாதுகாப்பு குறித்த கவலைகளை உடனடியாக எழுப்புகிறது. தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்தப்படுத்துவதன் மூலம் சுகாதார அமைச்சு அதனைக் கையாள்கிறது என்று அவர் கூறினார்.

சுகாதார புத்தாக்கத்திற்கான இங் டெங் ஃபோங் மையத்தில் நடைபெற்ற தேசிய சுகாதாரக் குழுமத்தின் புத்தாக்க மாநாட்டில் அமைச்சர் ஓங் பேசினார்.

சிங்கப்பூரில் நோய்த் தடுப்பிற்கான பராமரிப்பை மேம்படுத்தும் நாடு தழுவிய திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்களின் மருத்துவ நிலைமைகளுக்கான மரபணு பரிசோதனை ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எடுத்துக்காட்டாக, ஜூன் 30 முதல், தகுதியுள்ள சிங்கப்பூர் குடிமக்கள், அதிகக் கொழுப்புச்சத்து அளவை ஏற்படுத்தும் மரபணு நிலையான குடும்ப ஹைப்பர்கொலஸ்ட்ரோலேமியா (எஃப்.எச்) பரிசோதனையை மானியக் கட்டணத்தில் மேற்கொள்ளலாம்.

தனிநபர் தரவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்குத் தீர்வாக, பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதாரம், தகவல் சட்டத்தை அமைச்சு கொண்டுவரவுள்ளது என்று சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங் கூறினார்.

இந்தச் சட்டத்தின் கீழ், பல்வேறு தரவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அப்பால், நோயாளி தனது மருத்துவத் தரவுகளை சுகாதார வழங்குநர்களிடையே பகிரப்படுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

இது ஒரு சிறந்த ஏற்பாடாக இல்லாமல் இருக்கலாம், நோயாளி பராமரிப்பின் தரத்தை குறைக்கக்கூடும் என்றாலும் அத்தகைய தேர்வு அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

மரபணுத் தரவுகள் எளிதில் கிடைக்கும்போது, அவற்றின் பயன்பாடு குறித்தும் தொழில்நுட்பம் சமூக, தார்மீக எல்லைகளைத் தாண்டி பொதுமக்கள் கவலை கொள்வார்கள் என்று திரு ஓங் கூறினார்.

இது ஒரு சிறந்த ஏற்பாடாக இருக்காது. மேலும் நோயாளிக்கான கவனிப்பின் தரத்தை குறைத்து மதிப்பிடப்படுவதற்கு உட்படுத்தக்கூடும். அத்தகைய தேர்வு, அச்சங்களை நிவர்த்தி செய்கிறது மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

மரபணுத் தரவுகள் எளிதில் கிடைக்கும்போது, தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, தொழில்நுட்பம் கவனக்குறைவாக சமூக, தார்மீக எல்லைகளைத் தாண்டிச் செல்ல வைக்குமா என்பன குறித்து பொதுமக்கள் கவலை கொள்வார்கள்.

அதனால் மரபணுச் சோதனைத் தகவல்கள் பயன்பாடு குறித்து சட்ட ரீதியான பாதுகாப்பை அமைச்சு வலுப்படுத்துகிறது என்றார் திரு ஓங்.

குறிப்புச் சொற்கள்