தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது அவசியம்: ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம்

2 mins read
be7c748c-c278-4b10-9551-2514aa6080ec
கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூர் இணக்கமான சமூகத்தை உருவாக்க பல முயற்சிகளை எடுத்திருப்பதால் நாம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்றார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் சமூக கட்டமைப்பும் சமய நல்லிணக்கமும் எளிதில் உடையக்கூடியதாக இருந்தாலும் சமயம் சார்ந்த சம்பவங்களைக் கையாள்வதில் பிற நாடுகளைவிட சிங்கப்பூர் இன்னும் சிறந்த நிலையில் இருப்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம் கூறியுள்ளார்.

“பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வர். கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூர் இணக்கமான சமூகத்தை உருவாக்கப் பல முயற்சிகளை எடுத்திருப்பதால் நாம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்,” என்றார் இணைப் பேராசிரியர் ஃபை‌‌‌ஷால்.

அல் இஸ்திகாமா பள்ளிவாசலுக்குப் பன்றி இறைச்சி அடங்கிய பொட்டலம் அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டதை முன்னிட்டு அவர் பேசினார்.

இஸ்லாமியக் கொள்கைகளுக்கு ஏற்ப உயில்களைத் திட்டமிடவும் சொத்துகளை மாற்றவும் முஸ்லிம்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு இடையே பேராசிரியர் ஃபை‌‌‌ஷால் செய்தியாளர்களிடம் பேசினார்.

அந்தச் சம்பவத்தை அடுத்து முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவளித்த பிற சமய குழுக்களிடையே கவலை ஏற்பட்டது.

முஸ்லிம் சமூகமும் பிற குழுக்களும் கடந்த சில நாள்களில் வெளிப்படுத்திவரும் அக்கறை சமூகப் பிணைப்பைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என்றார் உள்துறை மூத்த துணையமைச்சருமான பேராசிரியர் ஃபை‌‌‌ஷால்.

அக்கறையும் ஆதரவும் தெரிவித்தோர் முஸ்லிம் சமூகம் வெளிப்படுத்திய அதே சினத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தினர் என்றார் அவர்.

பள்ளிவாசலில் ஏற்பட்டதைப் போல பிற சமூகத்துக்கும் ஏற்பட்டால் முஸ்லிம் சமூகம் முன்வந்து ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்று பேராசிரியர் ஃபை‌‌‌ஷால் கூறினார்.

பிற சமயத் தலைவர்களும் அரசாங்க அமைப்புகளும் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

சிங்கப்பூரின் முஃப்டிக்குக் கடிதம் அனுப்பிய கத்தோலிக்கக் கார்டினல் வில்லியம் கோ, சிங்கப்பூரின் ரோமன் கத்தோலிக்க பேராயம் நடந்ததை வன்மையாகக் கண்டிப்பதாகச் சொன்னார்.

சமயங்களுக்கு இடையிலான அமைப்பு, “ஒரு சமயத்துக்கு எதிரான செயல் அனைத்து சமயங்களுக்கும் எதிரான செயலாகத்தான் கருதப்படும்,” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்