தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாடகை வாகனங்களில் குழந்தை, முதியோர், சக்கர நாற்காலி வசதிகளுக்கு கோரிக்கை விடுக்க வசதி

2 mins read
73348ce8-fd46-4622-9190-b0a98b03feb0
செயலியில் புதிய வசதிகளுக்கு முன்பதிவு செய்வது எளிதாகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாடகை வாகனங்களுக்கு முன்பதிவு செய்யும்போது குழந்தைகள், முதியோர்கள் உடற்குறையுள்ளோர் ஆகியோருக்கு குழந்தைகளுக்கான இருக்கை, மடிக்கக்கூடிய சக்கர நாற்காலி வைப்பதற்கான கூடுதல் இடம் போன்ற வசதிகளுக்கு எளிமையான வழியில் தற்போது கோரிக்கை விடுக்கலாம்.

ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு போக்குவரத்துச் சேவை வழங்கும் வாடகை வாகனத் துறையை மதிப்பாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நவம்பரில் இப்புதிய வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் இந்த விவரங்களை டிசம்பர் 4ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

வாடகை வாகனங்களுக்கான பல்வேறு செயலிகளில் இடம்பெற்றுள்ள செயல்பாடுகளின் படங்களையும் அவர் அப்பதிவில் வெளியிட்டிருந்தார்.

கம்ஃபர்ட் டெல்குரோவின் ஸிக் (Zig) செயலியில் குழந்தைகளுக்கான முன்பதிவு, கோஜெக் (Gojek) செயலியில் உள்ள குழந்தைகளுக்கான, சக்கரநாற்காலிக்கான இடவசதி, கிராப் (Grab) செயலியில் உள்ள குழந்தை, மற்றும் சக்கர நாற்காலிக்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

கூடுதலாக, ஜனவரி முதல் டாக்சி சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் முனைக்கு முனை போக்குவரத்துச் சேவை வழங்குவதில் இடையூறு விளைவிக்கும் எந்தவொரு சம்பவங்களையும் ஒரு மணி நேரத்திற்குள் பயணிகள், ஓட்டுநர்கள், நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஆகியவற்றுக்குத் தெரிவிக்க வேண்டும்.

சிங்கப்பூர் சந்தையிலிருந்து விலக விரும்பும் டாக்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் உரிமத்தை ஒப்படைப்பதற்கு குறைந்தபட்சம் 120 நாட்களுக்கு முன்பு நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் தாங்கள் வெளியேறும் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இது, முன்னர் 60 நாள்களாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்