தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி உருமாற வேண்டும்: கவனிப்பாளர்கள்

1 mins read
48d4e5a8-0348-47e5-ba32-7a673a978f5e
சிமுக தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் (இடமிருந்து இரண்டாவது), தலைவர் டான் செங் போக் (வலமிருந்து இரண்டாவது), முதல் இணைத் தலைவர் ஹேசல் புவா (வலது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்க்கட்சியான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (சிமுக), 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நல்ல போட்டி கொடுத்தது.

ஆனால், இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் அக்கட்சி அதிகம் சோபிக்கவில்லை. சிமுகவை நிறுவிய டாக்டர் டான் செக் போக்குக்கு இருந்த வரவேற்பு 2020 தேர்தலில் அக்கட்சிக்குச் சாதகமாக இருந்தது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்போது அடுத்த கட்டத்துக்குச் செல்வதில் சிமுக முன்னேற்றம் காணவில்லை என்கின்றனர் வல்லுநர்கள்.

சிமுக தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய், முதல் இணைத் தலைவர் ஹேசல் புவா இருவரும் சிங்கப்பூரின் 14வது நாடாளுமன்றத்தில் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பு வகித்தனர். அது, இவ்வாண்டு பொதுத் தேர்தலில் அக்கட்சி சிறப்பாகச் செய்ய வழி வகுக்கவில்லை என்று அரசியல் கவனிப்பாளர் லோக் ஹோ இயோங் கூறினார்.

சிமுகவில் டாக்டர் டான் செங் போக்தான் தொடர்ந்து பிரபலமாக இருந்து வந்ததாக திரு லோக் குறிப்பிட்டார்.

அதேபோல் மற்றோர் அரசியல் கவனிப்பாளரான துணைப் பேராசிரியர் இயூஜீன் டான், ஓரளவு புதிய கட்சியான சிமுக, எந்த வகையிலும் இளையர்களைக் கவரும் வண்ணம் உருவெடுக்கவில்லை என்று சுட்டினார்.

நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பி ஆளும் கட்சிக்கு சவால் தந்திருந்தாலும் இனி சிமுக அதன் உத்திகளையும் முக்கிய இலக்குகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது கவனிப்பாளர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்