செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 6.20 மணிக்குப் பொது எச்சரிக்கை ஒலி தீவெங்கும் ஒலிக்கப்படும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அறிவித்துள்ளது.
எச்சரிக்கை ஒலி ஒரு நிமிடத்துக்கு நீடிக்கும் என்றும் அதைக் கேட்டு பதற்றம் அடைய வேண்டாம் என்று பொதுமக்களைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கேட்டுக்கொண்டது.
எஸ்ஜிசெக்யூர் கைப்பேசிச் செயலியில் எச்சரிக்கை ஒலி 20 வினாடிகளுக்கு ஒலிக்கப்படும் என்றும் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) அது ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதும் பொதுமக்கள் உள்ளூர் வானொலி கேட்க வேண்டும் அல்லது உள்ளூர் தொலைக்காட்சி ஒளிவழிகளைப் பார்க்க வேண்டும். அவற்றின் மூலம் பொதுமக்களுக்குத் தகவல் அளிக்கப்படும்.