இரண்டு ஆடவருக்கு இடையேயான கைகலப்பை அடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஒருவருக்குக் கையில் காயம், மற்றொருவருக்கு மாரடைப்பு.
மருத்துவ உதவி வாகனமும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வரும் முன்னர், மக்கள் கழகத்தின் சமூக அவசர பதில் நடவடிக்கைக் குழு உடனே விரைந்து உதவி நல்குகின்றனர்.
இப்படியாக, ‘தி அரீனா அட் கியட் ஹாங்’ சமூக விளையாட்டு வசதி இடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) காலையன்று இந்த பாவனைப் பயிற்சி நடைபெற்றது.
சுவா சூ காங் குழுத்தொகுதி, புக்கிட் கோம்பாக் தனித்தொகுதி ஆகியவற்றுக்கான சமூக மீள்திறன் நாளுக்கான நிகழ்ச்சியில் இந்தப் பயிற்சி அங்கம் வகித்தது.
அவசரகால நிகழ்வுகளின்போது சீருடை அதிகாரிகளுடன் பொதுமக்கள் எவ்வாறு ஒத்துழைக்கலாம் என்பதை விளக்குவது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
சிபிஆர் உயிர்க்காப்புச் சிகிச்சை அளிப்பதிலும் ஏஇடி இயந்திரத்தைப் பயன்படுத்துவதிலும் மக்கள் கழகத்தின் ‘பிஏ சர்ட்’ உறுப்பினர்கள் பயிற்சி பெற்றவர்கள்.
8,000 தொண்டூழியர்கள் கொண்ட ‘பிஏ சர்ட்’, மக்கள் கழகத்தின் சமூக அவசரகால, ஈடுபாட்டுக் குழுக்களில் அங்கம் வகிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அவசரகாலச் சூழலுக்குச் சமூகத்தைத் தயார்படுத்துவது, அத்தகைய சூழலில் முறையான பதில் நடவடிக்கையை எடுப்பது, அந்தச் சூழலிலிருந்து மீண்டு வருவது ஆகியவற்றை மேம்படுத்த இந்த ஏற்பாடு முனைகிறது.
அவசரகாலச் சூழலுக்குச் சமூகத்தைத் தயார்ப்படுத்துவது, அத்தகைய சூழலில் முறையான பதில் நடவடிக்கையை எடுப்பது, அந்தச் சூழலிலிருந்து மீண்டு வருவது ஆகியவற்றை மேம்படுத்த இந்த ஏற்பாடு முனைகிறது.
ஒருவருக்கு ஒருவரைப் பாதுகாத்து விழிப்புடன் இருப்பது எல்லோரும் பகிர வேண்டிய பொறுப்பாகும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.

