மக்கள் செயல் கட்சியின் பருவநிலை செயற்குழு ஏற்பாடு செய்த பொது நிகழ்வு

மக்கள் செயல் கட்சியின் பருவநிலை செயற்குழு ஏற்பாடு செய்த பொது நிகழ்வு

2 mins read
இவ்வாண்டு ஜனவரி 21ஆம் தேதி பருவநிலை செயற்குழு தொடங்கப்பட்டது
752d6225-ca00-4a42-8477-2d3b63908fe9
இயற்கையின் நிலைத்தன்மையை ஆதரிக்கும் நிறுவனங்களை வரவழைத்து, பொதுமக்கள் பயனடையும் வகையில் மக்கள் செயல் கட்சியின் பருவைநிலை செயற்குழு இந்த சாலை ஓர நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. - படம்: எஸ்பிஹெச் ஊடகம்
multi-img1 of 2

மக்கள் செயல் கட்சியின் பருவநிலை செயற்குழு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) ஏற்பாடு செய்த சமூக நிகழ்ச்சியில், தியோங் பாருவைச் சேர்ந்த ஏறத்தாழ 800 குடியிருப்பாளர்கள் திரண்டனர்.

‘பருவநிலை செயல்பாட்டு தினம்’ என்ற தலைப்பில் எங் ஹூன் ஸ்திரீட்டில் நடந்த அறிமுக நிகழ்வில் ‘எகோவொர்க்ஸ்’ என்ற புதிய வீட்டுச் சாதன விற்பனையாளர் உட்பட ஒன்பது வர்த்தகர்கள் பங்கேற்றனர்.

சாலை ஓரத்தில் நடந்த விழாவில் அன்றாட வாழ்வில் எவ்வாறு முறையான செயல்பாடுகளைக் கடைப்பிடிக்கலாம் என்பதை மக்கள் அறிந்துகொண்டனர்.

உதாரணமாக வீட்டில் வளர்க்கக்கூடிய காய்கறிகள், பயன்படுத்திய துணிமணிகளை வாங்குதல் போன்ற பழக்கவழக்கங்களைக் குறிப்பிடலாம்.

பங்கேற்ற வர்த்தகர்களில் சமூகப் பண்ணை நடத்துநரான ‘எடிபல் கார்டன் சிட்டி’, பசுமை அழகு சாதன தயாரிப்பாளரான ‘த பவ்டர் ஷாம்பூ’ போன்ற பிரபல நிறுவனங்கள் அடங்கும்.

இயற்கையின் நிலைத்தன்மையை பாதுகாக்க, நடைமுறைக்கேற்ற செயல்பாடுகளில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைந்து பங்கேற்க வைக்கும் இலக்குடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக மக்கள் செயல் கட்சியின் பருவநிலை செயற்குழுவின் துணைத் தலைவர் போ லீ சான் கூறினார்.

உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தண்ணீரை மிச்சப்படுத்தி, மின்சாரப் பயன்பாட்டை கட்டுப்படுத்தி சிங்கப்பூரர்கள் பங்காற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மக்கள் செயல் கட்சி, கடந்த ஜனவரி 21ஆம் தேதி இந்த பருவநிலை செயற்குழுவை தொடங்கிவைத்தது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை செயற்குழு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்