‘டீப்ஃபேக்’ காணொளிகளை அடையாளம் காண, வடிவஞ்சிதைந்த படங்கள், பேச்சாளரின் உதட்டு அசைவுக்கேற்ப இல்லாத பேச்சு போன்றவற்றைக் கவனிக்கவேண்டும்.
டிசம்பர் மாதம் பிரதமர் லீ சியன் லூங் போன்ற முக்கிய நபர்களைக் காட்டும் ‘டீப்ஃபேக்’ காணொளிகள் வெளியானதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொய்யான காணொளிகளைக் கண்டுபிடிக்க, தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தக் குறிப்புகளை வழங்கியுள்ளனர்.
சிங்கப்பூரில் இணையத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்க்க, சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இணையம் வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறனுக்கும் எதிரான சட்டமும் ஆதில் அடங்கும்.