வெள்ளம் ஏற்படும்போது பொதுமக்கள் தயாராக இருப்பதை ஊக்குவிக்க, பொதுப் பயனீட்டுக் கழகம் அதன் முதல் இயக்கத்தை நவம்பர் 20ஆம் தேதி தொடங்கியுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் திடீரென மாறும் வானிலையாலும் கடுமையாகும் கனமழையாலும், வெள்ளத்தில் சிக்குவதை மக்கள் தவிர்ப்பதற்காகக் கழகம் இயக்கத்தைத் துவக்கி வைத்துள்ளது.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் வெள்ள எச்சரிக்கைகளைக் கண்காணித்தல், எந்நேரமும் வெள்ளத்திற்குத் தயாராக இருத்தல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்தல், கழகம் வெள்ளம் தொடர்பாக வெளியிடும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல், முடிந்தவரை பிறருக்கு உதவுதல் போன்றவற்றைப் பொதுமக்கள் பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இயக்கத்துக்கான சுவரொட்டிகள், ஒரு நிமிடக் காணொளித் துணுக்கு ஆகியவற்றைத் தவிர ‘சிடிஜி ஸிக்’ (CDG Zig), ‘கிராப்’ (Grab), ‘மோட்டோரிஸ்ட்’ (Motorist) ஆகியவற்றுடனும் இணைந்து செயல்பட்டு தளங்களின் பயனாளர்களுடன் வெள்ளப் பாதுகாப்புக் குறிப்புகளைக் கழகம் பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டுக்குள் அதன் ஓட்டுநர்கள், உணவு விநியோக ஊழியர்கள் ஆகியோருடன் வெள்ள எச்சரிக்கைகளைச் செயலிவழி பகிர்ந்துகொள்ள கிராப் நிறுவனத்துடன் கழகம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் டெலிகிராம் (t./me/pubfloodalerts) வழியாகவும் myENV செயலி வழியாகவும் பொதுமக்கள் வெள்ள எச்சரிக்கைகளைப் பெற முடியும்.