செப்டம்பர் 15ஆம் தேதி பொது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்

செப்டம்பர் 15ஆம் தேதி பொது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்

1 mins read
b6aa6702-7f4f-444c-bdf2-55e245516c34
பொது எச்சரிக்கை சமிக்ஞை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இந்த வருடாந்தர நடவடிக்கையை மேற்கொள்வது வழக்கம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை செப்டம்பர் 15ஆம் தேதி ‘முக்கியத் தகவலுக்கான’ சமிக்ஞை ஒலியை எழுப்பவிருக்கிறது.

வெள்ளிக்கிழமை மாலை மணி 6.20க்குத் தீவு முழுவதும் அது ஒலிபரப்பப்படும்.

பொது எச்சரிக்கை முறையின்கீழ் அந்த ஒலி ஒரு நிமிடத்துக்கு எழுப்பப்படும். அதைக் கேட்டுப் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

சமிக்ஞை ஒலியைக் கேட்டவுடன் உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி மூலம் ஒலி, ஒளிபரப்பப்படும் தகவலைக் கேட்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பொது எச்சரிக்கை சமிக்ஞை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக படை கூறியது. 

‘எஸ்ஜிசெக்யூர்’ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள கைத்தொலைபேசிகளிலும் அந்தச் சமிக்ஞை ஒலியைக் கேட்க இயலும்.

பொது எச்சரிக்கை முறை குறித்த மேல்விவரங்களுக்கு  go.gov.sg/pws என்ற இணைய முகவரியை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்