குவா கிம் சோங் - சில்வியா லிம் திருமணம்

1 mins read
bbdf7115-3d79-45c3-899f-3ce182178e62
திருமணம் செய்துகொண்டனர் குவா கிம் சோங் (இடது), சில்வியா லிம். - படம்: SYLVIALIM65 / இன்ஸ்டகிராம்

முன்னாள் சிங்கப்பூர் காற்பந்து நட்சத்திரம் குவா கிம் சோங், பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம்மைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஒருகாலத்தில் காற்பந்துத் திடலில் தனது திறன்களாலும் ஆற்றலாலும் எதிர்க்குழுவினரை அச்சுறுத்திய 72 வயது கிம் சோங், சனிக்கிழமையன்று (ஜனவரி 4) திருவாட்டி லிம்மைத் திருமணம் செய்துகொள்ளும்போது அச்சத்துடன் காணப்பட்டார் என்று செல்லமான செய்தி வெளியானது. திருமணம் செய்து வைத்த பாதிரியார்கூட தான் அச்சத்துடன் இருந்ததைக் கவனித்ததாகக் கூறினார் திரு கிம் சோங்.

அதேவேளை, 59 வயது லிம் மிகவும் அமைதியாகக் காணப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய தம்பதி ஒரு கட்டட வாசலில் நடந்துசெல்வதைக் காட்டும் படத்தை திருவாட்டி லிம் சனிக்கிழமை மாலை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். கறுப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும் அப்படத்துக்கு சனிக்கிழமை இரவு 11 மணிக்குள் 4,000 பேர் விருப்பத்தைப் பதிவிட்டனர். நூற்றுக்கணக்கான சமூக ஊடக ரசிகர்கள் அவ்விருவருக்கும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

திருமணத்துக்குத் திட்டமிடப்பட்டதாக சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் தகவல் வெளியானது. பின்னர் இவ்வாண்டு ஜனவரி மாதம் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதாக திரு குவா நேர்காணல் ஒன்றில் உறுதிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்