ஜூலை முற்பாதியில் பகலில் மழை, இரவில் புழுக்கம்

1 mins read
f95a1f3a-b004-45e9-86fc-646a0337bdc3
பெரும்பாலான நாள்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தென்மேற்குப் பருவமழை காரணமாக இப்போதைய ஜூலை மாதத்தின் முற்பாதியில், பெரும்பாலான நாள்களில் முற்பகல் பின்னேரத்திலும் பிற்பகலிலும் இடியுடன் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், மழையின் அளவு சராசரியைத் தாண்ட வாய்ப்பில்லை என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஜூலை முதலிரு வாரங்களில், அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியசுக்குள் இருக்கும் என்று அம்மையம் முன்னுரைத்துள்ளது.

இரவுப்பொழுதில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியசுக்கும் மேல் இருக்கும் என்பதால் புழுக்கமாக உணரலாம்.

சிங்கப்பூரின் இரு மழைக்காலங்களில் முதலாவதான தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம்வரை நீடிக்கும்.

குறிப்புச் சொற்கள்